மின்னூட்டத் துகள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இயற்பியலில், மின்னூட்டத் துகள் (Charged particle) என்பது மின்மம் அல்லது மின்னூட்டத்துடன் உடைய துகளைக் குறிக்கும். இது ஒரு அணுவகத் துகளாகவோ அல்லது அயனியாகவோ இருக்கும். பொதுவாக, துகள்கள் என்பது நேர்மின்மம் அல்லது எதிர்மின்மம் கொண்டு அன்றி மின்னூட்டமற்று காணப்படும்.
எதிர் மின்சாரத்தின் மின்னூட்டத் துகள்களின் எண்ணிக்கையானது 1.6 X 10−19 கூலும் ஆக கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது ஒரு மின்னணுவில் (மின்னியில்) உள்ள மின்துகளின் எண்ணிக்கையாகும். அதே போன்று ஒரு கூலும்மில் உள்ள மின்னணுக்களின் எண்ணிக்கை 6 X 1018 என்பதாகும். இதேப் போன்று ஒரு 1 ஆம்பியர் மின்சாரம் என்பது 1 கூலும் துகள்கள் ஒரு நொடிக்கும் செலுத்தப்படுவதாகும். எனவே 1 ஆம்பியர் மின்சாரத்தில் 6 X 1018 மின்னணுக்கள் ஒரு நொடிக்கு செலுத்தப்படுகிறது எனலாம்.
ஒற்றை அயனிய துகள்களில் மின்னணுக்களின் எண்ணிக்கையும், மின்னூட்டின் எண்ணிக்கையும் ஒன்றாக இருக்கும். ஆனால், இரட்டை அயனிய துகள்களில் மின்னணுக்களின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்காக மின்னூட்டின் எண்ணிக்கை இருக்கும். இது அயனியின் மின்னூட்டம் எதிராக இருந்தால் அது மின்னணுவின் மின்னூட்டுடைய இடைவெட்டு பெருக்கத்தொகையாகவே அயனியின் மின்னூட்டு காணப்படுவதினால் ஆகும்.