முதன்மை பட்டியைத் திறக்கவும்

மின்னூட்டமிலாப் பொருள் மின்பிரிகை (Dielectrophoresis) என்பது மின்னூட்டமிலாத் துகள்கள் தூண்டு விசையினால் ஒரு சீரற்ற மின்புலத்தில் பிரிந்து செல்லுதலை குறிப்பதாகும். அந்த செலுத்தத்தின் பருமனும், திசையும் அந்த மின்னூட்டமிலாப் துகளைச் சுற்றியுள்ள பரப்பினைப் பொருத்தும், அந்த பொருளின் மீது தூண்டப்பட்ட மின்புலத்தை பொருத்தும் மாறுபடும்.

பின்புலம்தொகு

ஹெர்பெர்ட் போல் (Herbert Pohl) என்பவரே 1950ல் முதல் முறையாக துகள் மின்னியக்க விசையியலைப் பற்றி படித்தவர் ஆவார். குறிப்பாக, சீரற்ற மின்புலத்தில் முனைவாக்கக்கூடிய துகள்களைப் பற்றியதாகும். அவரே Dielectrophoresis[1] என்னும் சொல்லை பயன்படுத்தியவர். மின்னூட்டமிலாப் பொருள் மின்பிரிகை, ஆரம்ப காலங்களில் மைக்ரோ மீட்டர் அளவுகளில் உயிர்மிகளையும், துகள்களையும் செயலாக்கப் பயன்படுத்தினர். 1990களில் நானோ தொழில்நுட்பம் தொடங்கிய பொழுது புரத மூலக்கூறுகளையும், தீநுண்மங்களையும், டி.என்.ஏக்களையும் செயலாக்கத் தொடங்கினர்.

மேற்கோள்கள்தொகு

  1. Pohl HA (1978) Dielectrophoresis. Cambridge University Press, Cambridge