மின்சார நிறுத்தம்
(மின்வெட்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.
- உதாரணம்: ஒரு மின்னியக்கியில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரமானது ஒரு மணி நேரத்தில் நூறு கிலோவாட் ஆக இருக்கும் பட்சத்தில், ஒரு மின்சார பாவனையாளர் ஒரு மணி நேரத்துக்கு, ஒரு கிலோவாட் மின்சாரம் தேவைப்படுகிறது என்றால், நூறு வீடுகளுக்குத்தான் இந்த மின்சாரம் போதுமானதாக உள்ளன. இதே போன்று ஒவ்வொரு மின்சார பாவனையாளரும் ஐந்நூறு வாட் மின்சாரம் பயன்படுத்தினால் மேலதிகமாக நூறு பாவனையாளர்களுக்கு மின்சாரம் போதுமானது. அதாவது இருநூறு மின்சார பாவனையாளருக்கு மின்சாரம் போதுமானது. மேலதிக மின்சார பாவனையாளருக்கு மின்சாரம் கிடைக்க வேண்டும் என்றால் மின்சாரத்தை சேமிப்பதன் மூலம் இது சாத்தியமாகிறது.