மின்வெளி நன்னெறி
மின்வெளி நன்னெறி (Cyberethics) என்பது கணினிகள் தொடர்பான நெறிமுறைகளின் தத்துவ ஆய்வாகும். இணையத்தில் பயனாளர்களின் நடத்தை மற்றும் கணினிகள் என்ன செய்ய வேண்டுமெனத் திட்டமிடப்பட்டுள்ளன, இது தனிநபர்களையும் சமூகத்தையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதுகுறித்த நெறிமுறைகள் ஆகும். பல ஆண்டுகளாக, பல்வேறு அரசாங்கங்கள் இதற்கான விதிமுறைகளை இயற்றியுள்ளன. அதே நேரத்தில் நிறுவனங்கள் மின்வெளி நன்னெறி பற்றிய கொள்கைகளை வரையறுத்துள்ளன.
தனியுரிமை வரலாறு
தொகு19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், புகைப்படக் கருவிகளின் கண்டுபிடிப்பு இணையம் இன்றுள்ளதை போலவே இதேபோன்ற நெறிமுறை விவாதங்களைத் தூண்டியது. 1890 இல் ஆர்வர்ட் லா ரிவியூவின் ஒரு கருத்தரங்கின் போது, வாரன் மற்றும் பிராண்டீஸ் தனியுரிமையை ஒரு நெறிமுறை மற்றும் தார்மீக பார்வையில் இருந்து வரையறுத்தனர்:
"தனியுரிமை என்பது கண்ணியம், தனித்துவம், ஆளுமை ஆகியவற்றை மையமாகக் கொண்டது. சுயாட்சி உணர்வுக்கு தனியுரிமை இன்றியமையாதது; - 'ஒரு நபரின் வாழ்க்கையின் ஒரு பகுதி முற்றிலும் அவரது கட்டுப்பாட்டில் உள்ளது என்ற உணர்வுக்கும், வெளியில் இருந்து வரும் ஊடுருவலிலிருந்து விடுபட்ட ஒரு பகுதி.' தனியுரிமையை இழப்பது ஒரு நபரின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிக்கும். " [1]
100 ஆண்டுகளுக்குப் பிறகு, அரசாங்கங்கள் மூலம் பெறப்படும் தனியார் தரவுகளின் பெருக்கமும், இணையவழி வணிகமும் [2] ஒரு நபரின் தனியுரிமை சம்பந்தப்பட்ட புதிய சுற்று நெறிமுறைக்கான விவாதம் தேவைப்படும் ஒரு பகுதியாக மாறலாம்.
"இரகசியம், தெரியாத ஒரு நபர் மற்றும் தனிமை ஆகிய மூன்று கூறுகள்" கொண்ட ஒரு நபருக்கான மற்றவர்களின் அணுகலைக் கட்டுப்படுத்துவதற்கு தனியுரிமை சிதைக்கப்படலாம். [3] தெரியாத ஒரு நபர் என்பது ஒருவரை விரும்பத்தகாத பிறரின் கவனத்திலிருந்து பாதுகாப்பதற்கான தனிநபரின் உரிமையைக் குறிக்கிறது. தனிமை என்பது ஒரு நபரின் உடல் அருகாமையில் இல்லாததைக் குறிக்கிறது. ரகசியம் என்பது தனிப்பயனாக்கப்பட்ட தகவல்களை இலவசமாக விநியோகிக்காமல் பாதுகாப்பதைக் குறிக்கிறது.
தனியுரிமையின் தேவை
தொகுபரிவர்த்தனைகளை நடத்தும்போதும் மற்றும் சேவைகளுக்கு பதிவு செய்யும் போதும் தனிநபர்கள் தனிப்பட்ட தகவல்களை ஒப்படைக்கிறார்கள். இரகசியம், பெயர் தெரியாத நபர் மற்றும் தனிமை இழப்புக்கு பங்களிக்கும் தகவல்களைப் பாதுகாப்பதன் மூலம் வணிக நடைமுறை நெறிமுறை அவர்களின் வாடிக்கையாளர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கிறது. கடன் அட்டை தகவல்கள், சமூக பாதுகாப்பு எண்கள், தொலைபேசி எண்கள், தாய்மார்களின் இயற்பெயர்கள், முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்கள் இலவசமாக இணையத்தில் சேகரிக்கப்பட்டு பகிரப்படுவது தனியுரிமை இழப்புக்கு வழிவகுக்கும்.
மோசடி மற்றும் ஆள்மாறாட்டம் ஆகியவை தனிப்பட்ட தகவல்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பெற்று அவருக்குத் தீங்கிழைக்கும் செயல்களாகும். இணையத்தில் தனியார் தகவல்கள் கிடைப்பதால் அடையாள திருட்டு வேகமாக அதிகரித்து வருகிறது. உதாரணமாக, 2002 ஆம் ஆண்டில் ஏழு மில்லியன் அமெரிக்கர்கள் அடையாள திருட்டுக்கு பலியானார்கள். சுமார் 12 மில்லியன் அமெரிக்கர்கள் 2011 இல் அடையாள திருட்டுக்கு பலியாகினர். இது அமெரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் குற்றமாகும். இணையத் தேடுபொறிகள் மற்றும் தரவுத்தளங்கள் ஆகியவை கணினி குற்றங்கள் அதிகரிக்க முக்கிய காரணிகள் ஆகும் எனப் பொதுப் பதிவுகள் கூறுகின்றன. முக்கியம் வாய்ந்த நபர்களின் தகவல்களை பெருக்கவிடாமல் இணைய தள தரவுத்தளங்களை கட்டுப்படுத்த சில பரிந்துரைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
சமூக பாதுகாப்பு எண்கள், பிறந்த தேதிகள், சொந்த ஊர் மற்றும் தாய்மார்களின் இயற்பெயர்கள் போன்ற முக்கியமான தனித்துவமான அடையாளங்காட்டிகளை தரவுத்தள பதிவுகளிலிருந்து விலக்கவும்.
பொதுவாகத் தொலைபேசி எண்களை தரவாகத் தருவதை விலக்கவும்.
ஒரு தரவுத்தளத்திலுள்ள தரவுகளிலிருந்து மக்கள் தங்கள் பெயர்களை எளிதாக அகற்ற அனுமதிக்கும் ஒரு முறை இருப்பதை தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்
மாற்று சமூக பாதுகாப்பு எண் குறித்த தேடல் சேவைகளை தடை செய்தல் வேண்டும்.[4]
குறிப்புகள்
தொகு- ↑ Samuel D. Warren; Brandeis, Louis (February 1998). "Privacy, photography, and the press". Harvard Law Review 111 (4): 1086–103. doi:10.2307/1342012. https://archive.org/details/sim_harvard-law-review_1998-02_111_4/page/1086.
- ↑ "Privacy". Electronic Frontier Foundation.
- ↑ Gavison, Ruth E. (January 1980). "Privacy and the Limits of Law". The Yale Law Journal 89 (3): 421–71. doi:10.2307/795891.
- ↑ Cyberethics: Morality and Law in Cyberspace.
வெளி இணைப்புகள்
தொகு- Association for Computing Machinery, Special Interest Group: Computers and Society website
- International Center for Information Ethics website
- The Centre for Computing and Social Responsibility website
- Safer Internet Center which includes Awareness Node, Helpline and Hotline
- Cyprus Safer Internet Helpline, Cyprus Safer Internet Hotline
- Cyber-Rights and Cyber-Liberties website
- IEEE Website
- ACM website
- ISC2 website
- Internet Architecture Board