மின்வேதியியல் இருமைக்கொள்கை

மின் வேதியியல் இருமைக்கொள்கை (Electrochemical dualism) என்பது வேதியியலில் வழக்கற்றுப் போன ஒரு விஞ்ஞானக் கோட்பாடாகும், இயான்சு யேக்கப் பெர்செலியசு[1] முன்னோடியாக இருந்த இக்கொள்கை 1800 முதல் 1830 வரையிலான காலத்துடன் தொடர்புடையதாகும். அனைத்து மூலக்கூறுகளும் கார மற்றும் அமில ஆக்சைடுகளால் ஆன உப்புகள் என்று இக்கோட்பாடு கூறியது. எடுத்துக்காட்டாக பொட்டாசியம் சல்பேட்டு என்ற சேர்மம் K2O மற்றும் SO3 ஆகியவற்றின் உப்பாக பார்க்கப்பட்டது. வில்லெம் இசிங்கருடன் இணைந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வோல்டாயிக் பைல் என்ற முதல் தலைமுறை மின்கலத்தைப் பயன்படுத்தி சில உப்புகள் குறித்து தான் நடத்திய சோதனைகளின் அடிப்படையில் பெர்செலியசு தனது கோட்பாட்டை முன்வைத்தார். பல சேர்மங்கள் மின்சாரத்தால் சிதைவடையும் என்றும் அமிலக் கூறுகள் நேர்துருவத்திலும் காரக் கூறுகள் எதிர்மின் துருவத்திலும் சிதைவடைகின்றன என்றும் அவர்கள் கவனித்தனர். இந்த கோட்பாடு இறுதியில் எதிர்க்கப்பட்டு தனி உருபு கோட்பாட்டின் மூலம் தவிர்க்கப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. Jöns Jacob Berzelius, Richard A. Pizzi, Today's Chemist At Work, 2004, page 58