மின் வலைப்பின்னல்

மின் வலைப்பின்னல் அல்லது மின்தொகுப்பு இயக்கம் [1] என்பது மின் உற்பத்தியாளர்களையும் மின் நுகர்வோரையும் இணைத்த ஒரு வலைப்பின்னல் ஆகும். மின் ஆற்றலை பெருமளவில் சேமித்து வைப்பது சிரமனானது (செலவு அதிகம்) என்பதால் உற்பத்தியும் நுகர்வும் மிக நுணுக்கமாக கட்டுப்பாடு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. மின்தேவைக்கு ஏற்ப உற்பத்தி கூட்டவும் குறைக்கவும் படுகிறது. உற்பத்தியை விட நுகர்வு கூடுதலானால் கட்டுப்பாடான முறையில் நுகர்வு (மின்வெட்டு போன்ற முறைமைகளால்) மட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் இரு மின்வழங்கிகளின் ஆற்றலை இணைப்பதும் சீராக வைப்பதும் நுட்பமான பணியாகும். மின் அதிர்வெண்ணை நிர்ணயிக்கப்பட்ட 50 அல்லது 60 ஹெர்ட்சில் வைத்திருக்கவும் இது பயனாகிறது.

மின் வலைப் பின்னலொன்றின் பொதுவான வரைபடம். குறிப்பிடப்பட்டுள்ள மின்னழுத்தங்களும் மின்சார கம்பி குறியீடுகளும் வழக்கமாக செருமனியிலும் பிற ஐரோப்பிய நாடுகளிலும் பயன்படுத்தப்படுபவை.

தற்காலத்தில் மின் வலைப்பின்னல் மையப்படுத்தப்பட்ட ஒரு பின்னலே (Centralized Grid). அதாவது சில பெரிய மின் உற்பத்தி நிலையங்களையும், அவற்றில் இருந்து திறன் பெறும் கட்டுப்பாட்டு நிலையங்களையும், பல மில்லியன் நுகர்வோரையும் கொண்டிருக்கிறது.

மின் வலைப்பின்னலின் கூறுகள்

தொகு
  1. மின் உற்பத்தி - மின் உற்பத்தி நிலையங்கள் பொதுவாக மக்கள்தொகைமிக்க இடங்களிலிருந்து தள்ளி நீர்நிலைகள் போன்று ஆற்றல்வளமிக்க இடங்களுக்கு அண்மையில் அமைக்கப்படுகின்றன. மேலும் அவை பொருளாதார பேணலுக்கான உற்பத்தித் திறனுடன் அமைக்கப்படும். உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மிகு மின்னழுத்தத்திற்கு உயர்த்தப்பட்டு மின் தொடரமைப்புடன் இணைக்கப்படுகிறது.
  2. மின்திறன் செலுத்தல் - மின் தொடரமைப்பு மூலம் வெகு தொலைவிற்கு மின்சாரம் எடுத்துச் செல்லப்படுகிறது. இது மாநில எல்லைகளைத் தாண்டியும் சில யேரங்களில் பன்னாட்டு எல்லைகளைத் தாண்டியும் செல்லும். மொத்த மின்நுகர்வு மையத்திற்கு (பெரும்பாலும் உள்ளூர் மின் வழங்கல் நிறுவனம்) கொண்டு செல்கிறது.
  3. மின் வழங்கல் - துணை மின்நிலையத்தை அடைந்த மின்சாரத்தின் மின்னழுத்தத்தைக் குறைத்து வழங்கல் மின்னழுத்தத்திற்கு மாற்றப்படுகிறது. இங்கிருந்து வழங்கல் வலையமைப்பின் மூலம் நுகர்வோர் புள்ளிக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஒப்பந்த சேவை மின்னழுத்தத்தில் வழங்கப்படுகிறது.

மேற்கோள்களும் குறிப்புக்களும்

தொகு
  1. "தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகப் பயன்பாடு". Archived from the original on 2012-02-28. பார்க்கப்பட்ட நாள் 2012-08-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்_வலைப்பின்னல்&oldid=3567674" இலிருந்து மீள்விக்கப்பட்டது