மின் வேதி அரிமானம்


காற்றிலுள்ள கார்பன்டை ஆக்ஸைடு, ஆக்ஸிஜன் மற்றும் நீராவி முன்னிலையில் உலோகங்கள் வேதி வினை புரிந்து அதன் பரப்பில் உலோகச் சேர்மங்களை உண்டாக்குகின்றன். இந்த நிகழ்வு உலோகங்களின் அரிமானம் எனப்படுகிறது. இதனால் உலோகங்கள் வலிமை இழக்கின்றன.

அரிமானத்தின் வகைகள்: 1. உலர் அரிமானம் 2. மின் வேதி அரிமானம்

மின் வேதி அரிமானம் இவ்வகை அரிமானம் மூழ்கிய அரிமானம் எனவும் அழைக்கப்படுகிறது.கடத்தும் நீர்மம் உலோகத்துடன் தொடர்பு கொண்டிருக்கும் போது அல்லது இரண்டு வெவ்வேறு உலோகம் அல்லது உலோகக் கலவைகள் ஒரு கரைசலில் பகுதியளவு அல்லது மூழ்கியிருக்கும் போது இவ்வகை அரிமானம் நிகழ்கிறது. ஈர அல்லது மின்வேதி அரிமானம் மூன்று வகைப்படும்.

1. வேதி அரிமானம் 2. நீருக்கு அடியில் அரிமானம் 3.பூமிக்கு அடியில் அரிமானம் அல்லது மண் அரிமானம்

1.வேதி அரிமானம் ஒரு உலோகம் அதனைச் சூழ்ந்துள்ள நீர்மத்துடன் வேதிவினை அல்லது மின்வேதி வினை புரிவதால் இவ்வகை அரிமானம் நிகழ்கிறது. கடத்தும் நீர்மத்தில் நேர்மின் மற்றும் எதிர்மின் பகுதிகள் தனித்தனியாக தோன்றி அவற்றிற்கிடையே ( கடத்தும் நீர்மத்தில்) மின்விசை பாய்வதால் இவ்வகை அரிமானம் நிகழ்கிறது. நேர்மின் பகுதியிலேயே எப்போதும் அரிமானம் நிகழ்கிறது. 2. நீருக்கு அடியில் அரிமானம்: எல்லா வகையான் நீர்க்குழாய்கள், வெப்பச் சாதனங்கள், நீராவிக் கொதிகலன்கள் போன்றவற்றில் நிகழக்கூடிய அரிமானம் இவ்வகையைச் சார்ந்ததாகும். இவ்வகை அரிமானத்தில் நீர் தேவையான் அளவு உள்ளது. ஆனால் காற்று சிறிதளவே உள்ளது. 3. மண் அரிமான்ம்:

    பூமிக்கு அடியில் உள்ள குழாய்கள் மற்றும் பூமிக்கடியில் உள்ள ஏனைய கட்டுமானங்கள், கான்கிரீட்டில் உள்ள இரும்பு உலோகம் போன்றவற்றில் இத்தகைய அரிமானம் நிகழ்கிறது. மண்ணில் பல்வேறு வகையான் உப்புகள் இருப்பதால் இவ்வகையான அரிமானம் சிக்கலானதாகி விடுகிறது.

இயற்பு வேதியியல்: 2- வைத்தியநாதன், வெங்கடேஸ்வரன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்_வேதி_அரிமானம்&oldid=3599557" இலிருந்து மீள்விக்கப்பட்டது