மிர்-938 நுண்ணிய ஆர் என் ஏ முன்னோடி குடும்பம்
மிர்-938 நுண்ணிய ஆர். என். ஏ. முன்னோடி குடும்பம் (mir-938 microRNA precursor family) என்பது மூலக்கூறு உயிரியலில் குட்டையான இரைபோ கருவமிலம் ஆகும். பல்வேறு உடல் செயல்பாடுகளின் போது மரபணுக்களின் பண்புகள் வெளிப்படுவதை ஒழுங்குபடுத்தும் பணியை இந்த நுண்ணிய ஆர். என். ஏ. செய்கிறது.
மிர்-938 மற்றும் டி.ஜி.எப். பீட்டா பாதை
தொகுமிர்-938 நேரடியாக எசு. எம். ஏ. டி. 3 மரபணுவை இலக்காகக் கொண்டிருக்கிறது. இது முக்கிய கீழோட்ட நிகழ்வுகளில் டி.ஜி.எப். பீட்டா பாலிப்பெப்டைடு எனும் பல்புரதக் கூறான எசு. எம். ஏ. டி. 3 குறியீட்டைக் குறிக்கிறது. இந்த நுண்ணிய ஆர். என். ஏவானது இயல்பான பிட்யூட்டரி திசுவுடன் ஒப்பிடும்போது செயலற்ற பிட்யூட்டரி சுரப்பி கட்டியில் (என். எப். பி. ஏக்களில்) அதிகமாக உள்ளது. டி. ஜி. எப்-பீட்டா சமிக்ஞைகளின் கீழ்பகுதி என். எப். பி. ஏ. கட்டி உருவாதலின் சமிக்ஞை வழிவகையின் கட்டுப்பாடுகளில் பங்கு வகிக்கக்கூடும், இதனால் SMAD3 மற்றும் மைஆர்-938 ஆகியவற்றை உள்ளடக்குகிறது.[1]