மில்லர் செயன்முறை

தங்கம் சுத்திகரிக்கும் தொழிற்துறை செயல்முறை

மில்லர் செயல்முறை (Miller process) என்பது தொழில்துறை அளவிலான ஒரு வேதியியல் செயல்முறையாகும், இச்செயல்முறை தங்கத்தை அதிக அளவு தூய்மைக்கு (99.5%) சுத்திகரிக்க பயன்படுகிறது. 1867 ஆம் ஆண்டில் பிரான்சிசு போயர் மில்லர் என்பவரால் இச்செயல்முறை காப்புரிமை பெற்றது. குளோரின் வாயுவை உருகிய, ஆனால் (சற்று) தூய்மையற்ற தங்கத்தின் வழியாக ஊதுவது இந்த இரசாயன செயல்முறையின் நடைமுறையாகும். ஏறக்குறைய அனைத்து உலோக அசுத்தங்களும் குளோரினுடன் வினைபுரிந்து குளோரைடுகளை உருவாக்குகின்றன. ஆனால் தங்கம் இந்த உயர் வெப்பநிலையில் குளோரினுடன் வினைபுரியாது. மற்ற உலோகங்கள் ஆவியாகின்றன அல்லது உருகிய தங்கத்தின் மேல் குறைந்த அடர்த்தியுள்ள கசடுகளை உருவாக்குகின்றன. [1] [2] [3]

தங்கத்தில் இருந்து அனைத்து அசுத்தங்களும் அகற்றப்பட்டால் (சுடர் நிறத்தில் ஏற்படும் மாற்றத்தை காணலாம்) தங்கம் அகற்றப்பட்டு விற்பனை அல்லது பயன்பாட்டிற்குத் தேவையான முறையில் செயலாக்கப்படுகிறது. இதன் விளைவாக கிடைக்கும் தங்கம் 99.5% தூய்மையானது, ஆனால் பொதுவான சுத்திகரிப்பு முறையான வால்வில் செயல்முறையால் உற்பத்தி செய்யப்படும் தங்கத்தை விட குறைவான தூய்மையானது. வால்வில் செயல்முறை 99.999% தூய்மையான தங்கத்தை உற்பத்தி செய்கிறது. [1] [2]

வால்வில் செயல்முறை பொதுவாக உயர்-தூய்மை தங்கத்தை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படுகிறது, மின்னணுவியல் வேலைகளில், தூய்மையின் துல்லியமான தரநிலைகள் தேவைப்படுகின்றன. அதிக தூய்மையான தங்கம் தேவைப்படாதபோது, சுத்திகரிப்பாளர்கள் மில்லர் செயல்முறையை பயன்படுத்துகின்றனர். ஏனெனில் ஒப்பீட்டளவில் மில்லர் செயல்முறை எளிமை, விரைவானதுமாகும். குளோரோவாரிக் அமிலத்தின் வடிவத்தில் அதிக அளவு தங்கத்தை இணைக்கப்பட்டுதான் நிரந்தரமாக வால்வில் செயல்முறையின் மின்பகுளி பயன்படுத்தப்படுகிறது. [1] [2]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மில்லர்_செயன்முறை&oldid=3866046" இலிருந்து மீள்விக்கப்பட்டது