மீக்கடத்துதிறன்

மீக்கடத்துதிறன் அல்லது மிகைக்கடத்தல் (superconductivity) என்பது மிகக் குறைந்த வெப்பநிலையில் மின்தடை சுழி மதிப்பினை அடையும்போது அத்திறனுடன் மின்னோட்டதை கடத்தும் தன்மை ஆகும். சாதாரண கடத்திகள், குறைந்த வெப்பநிலையில் அதிக கடத்துத்திறனைப் பெறுகின்றன. மீக்கடத்துத்திறனை முதலில் ஹெய்க் காமர்லிங் ஆன்ஸ் என்பவர் 1911 இல் கண்டறிந்தார். 4.2 K வெப்பநிலையில் பாதரசத்தின் மின்தடை திடீரென சுழி மதிப்பை அடைவதைக் கண்டறிந்தார்.உலோகங்களும் அவைகளின் கலவைகளும் மின்சாரத்தினை எளிதில் கடத்துகின்றன. அவைகள் மின்னோட்டத்திற்கு ஒரு தடையினை கொடுக்கின்றன. இந்த மின்தடை வெப்பநிலையுடன் மாறுகிறது. வெப்பநிலை குறையும் போது தடையும் குறைகிறது. வெப்பநிலை தனிவெப்ப கீழ்வரம்பை (Absolute zero ) எட்டும் போது இத்தடை சுன்னமாகிறது. இப்போது மின்னோட்டத்திற்கு தடை இல்லாத்தால் மின்சாரம் தொடர்ந்து பாய்கிறது.

மேஸ்ஷ்ணர் விளைவு
மின்காந்த உயர்த்தியின் செய்முறை

உலோகத்தின் பண்புகள்

தொகு
  • மின்தடை :  Ω அளவிற்கு மிகக்குறைவு
  • அதிக மின்புலத்திற்கு உட்படுத்தும் போது மீக்கடத்தும் திறனை இழக்கிறது
  • மின்புலத்தில் வைக்கும் போது டையா காந்தமாக செயல்படுகிறது

வகைகள்

தொகு

மின்காந்த புலத்தில் இவைகளின் செயல்பாடுகள் வைத்து இவ்வகை உலோகங்களை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். அவை,

  • வன் மீக்கடத்திகள்
  • மென் மீக்கடத்திகள்

பயன்பாடுகள்

தொகு

மீக்கடத்திகள் மருத்துவ மற்றும் பொறியியல் துறைகளில் மிகவும் பயன்படுகிறது

இவற்றையும் பார்க்கவும்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீக்கடத்துதிறன்&oldid=2756499" இலிருந்து மீள்விக்கப்பட்டது