மீச்சிறு பொது மடங்கு

கணிதத்தில் எண் கோட்பாட்டில் மீச்சிறு பொது மடங்கு (மீபொம) (இலங்கை வழக்கு: பொது மடங்குகளுள் சிறியது - பொ.ம.சி; ஆங்கிலத்தில் least common multiple, அல்லது lowest common multiple (LCM) அல்லது smallest common multiple) என்பது பொதுவாக a, b ஆகிய இரண்டு எண்களின் பெருக்குத்தொகையாக அமைந்த மிகச்சிறிய நேர்ம முழு எண் ஆகும். இவ்வெண் பெருக்குத்தொகை ஆகையால் a, b ஆகிய இரண்டு எண்களும் தனித்தனியாக இதனை மீதியின்றி வகுக்கும். ab ஓ சுழியாக (0) இருந்தால், மீபொம (ab)= 0. மீபொம = LCM.

இவ்வரையறை இரண்டு எண்களுக்கும் கூடுதலான எண்ணிகையில் உள்ள எண்களுக்கும் பொதுமைப்படுத்திக் கூறுவதுண்டு. முழு எண்கள் a1, ..., an ஆகியவற்றின் மீச்சிறு பொது மடங்கு என்பது a1, ..., an ஆகிய ஒவ்வொன்றும் மீதியின்றி வகுக்ககூடிய மிகச்சிறிய எண்.

எடுத்துக்காட்டு தொகு

எண் 4 என்பதன் மடங்குகள்:

4,8,12,16,20,24,28,32,36,40,44,48, ...

(அடுத்த மடங்கைப் பெற ஒவ்வொன்றுக்கும் 4 என்னும் எண்ணைக் கூட்டுக).

எண் 6 என்பதன் மடங்குகள்:

6, 12, 18, 24, 30, 36, 42, 48, 54, 60, 66, 72, 78, ...

(அடுத்த மடங்கைப் பெற ஒவ்வொன்றுக்கும் 6 என்னும் எண்ணைக் கூட்டுக).

மேலே உள்ள 4 இன் மடங்குகளுக்கும் 6 இன் மடங்குகளுக்கும் பொதுவான மடங்குகள்:

12, 24, 36, 48, ....

ஆனால் இவற்றுள், 4, 6 உக்கான மிகச்சிறிய பொது மடங்கு (மீச்சிறு பொது மடங்கு) (least common multiple) : 12.

பயன்பாடுகள் தொகு

பின்னங்களைக் கூட்டும்பொழுதும் கழிக்கும்பொழுதும் ஒப்பிடும் பொழுதும் , அப் பின்னங்களுக்குப் பொதுவான ஒரு கீழ் எண்களைக் கண்டுபிடிக்க மீச்சிறு பொது மடங்கு (lowest common denominator) தேவைப்படுகின்றது தேவைப்படுகின்றது. எடுத்துக்காட்டாக,

 

மேலுள்ள எடுத்துக்காட்டில் பின்னங்களின் கீழெண்ணாக 42 பயன்படுத்தப்பட்டது, ஏனெனில் அதுவே 21 மற்றும் 6 ஆகியவற்றின் மிகச்சிறிய பொது மடங்கு (மீச்சிறு பொது மடங்கு).

மீச்சிறு பொது மடங்கைக் கணக்கிடுதல் தொகு

மீப்பெரு பொது வகுத்தியால் குறைத்தல் தொகு

கீழ்க்காணும் வாய்பாடு, மீச்சிறு பொது மடங்கைக் காண மீப்பெரு பொது வகுத்தியைக் கணக்கிடுவதாக மாற்றுக்கின்றது:

 

மீப்பெரு பொது வகுத்தியைக் கண்டுபிடிக்க விரைந்து இயங்கும் படித்தீர்வு முறைகள் உண்டு. இவை யூளிட்டின் படித்தீர்வு முறையைப் போல எண்ணின் காரணிகளை கண்டுபிடிக்கத்தேவை இல்லை.மேற்குறிப்பிட்ட எடுத்துக்குக் காட்டுக்கு மீண்டும் செல்ல,

 

மீப்பெரு பொது வகுத்தி மீபொவ (a, b) [gcd(a, b] என்பது a மற்றும் b ஆஅகிய இரண்டின் வகுத்தி (வகுக்கும் எண்)) ஆகையால், மீச்சிறு பொது மடங்கைக் காண பெருக்குவதற்கு முன்னர் பொது வகுத்தியால் முதலில் வகுப்பது திறன் மிக்கதாகும்:

 

இம்முறை உள்ளிடும் எண்ணின் மதிப்பை வகுப்பதிலும் பெருக்குவதிலும் குறைப்பதால் இடை நிலைகளில் (intermediate steps) எழும் எண்களை நினைவில் கொள்ளவோ சேமிக்கவோ எளிதாகும். இவ்வாறு செய்வதால் முன்னர் காட்டிய எடுத்துக்காட்டைக் கீழ்க்காணுமாறு எழுதலாம்:

 

இவற்றையும் பார்க்கவும் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மீச்சிறு_பொது_மடங்கு&oldid=3754039" இலிருந்து மீள்விக்கப்பட்டது