மீட்சியியல்

மீட்சியியல்

ஒரு பொருளின் மீது செயல்படும் வெளிவிசை நீக்கப்படும் போது அல்லது நிறுத்தப்படும் போது அது தன்னுடைய தொடக்க நிலையை அடையும் பண்பு மீட்சியியல் எனப்படும்.

மீட்சி அடையும் பொருட்கள் தொகு

ஒரு பொருளின் மீது ஏதேனும் ஒரு புறவிசை செயல்படும் போது அதனுடைய பரிமாணத்திலும், உருவத்திலும் ,மாற்றம் அடைகிறது அந்த புறவிசை நிறுத்தப்பட்டதும் தன்னுடைய பழைய தொடக்க நிலையை முற்றிலும் அடைகிறது. அத்தகைய பொருட்கள் மீட்சி அடையும் பொருட்கள் எனப்படும். எ.கா. குவார்ட்ஸ், எக்கு

மீட்சி அடையாப் பொருட்கள் தொகு

அவ்வாறு தன்னுடைய பழைய தொடக்க நிலையை அடையாத பொருட்கள் மீட்சி அடையாப் பொருட்கள் எனப்படும். எ.கா: பிளாஸ்டிக், களிமண்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மீட்சியியல்&oldid=3924677" இலிருந்து மீள்விக்கப்பட்டது