மீதைலகற்றம்

மீதைலகற்றம் என்பது, குறித்த மூலக்கூறு ஒன்றிலிருந்து, மீதைல் கூட்டத்தை (CH3) அகற்றும் செயற்பாடாகும்.[1][2] வழக்கமாக, மீதைலகற்றல், அம்மீதைல் கூட்டத்தை ஒரு ஹைட்ரஜன் (ஐதரசன்) அணுவால் பிரதியிடுவதன் மூலம் நிகழ்த்தப்படுகின்றது. இச்செயற்பாட்டில், ஒரு கார்பன் அணு்வும், மூன்று ஐதரசன் அணுக்களும் அகற்றப்பட, பதிலாக, ஒரேயொரு ஐதரசன் அணு இணைக்கப்படுவதால், இத்தாக்கம் குறித்த மூலக்கூறில் பெரும் திணிவிழப்பை ஏற்படுத்துகின்றது. மீதைலகற்றத்துக்கு எதிரான செயற்பாடு, "மீதைலேற்றம்" என்று அறியப்படுகின்றது.

வெவ்வேறு மீதைல் கூட்டங்கள் (நீல நிறத்தில் காட்டப்படுபவை)

உயிர்வேதியியல் தொகு

உயிர்வேதியியல் தொகுதிகளில், மீதைலகற்றச் செயற்பாடுகள், மீதைலகற்றேசு (demethylase) நொதியங்கள் மூலம் நிகழ்த்தப்படுகின்றன. கிஸ்டோனிலும் சில தாயனைகளிலும் N-மீதைல் கூட்டத்தை ஒட்சியேற்றி இவை மீதைலகற்றத்துக்கு உதவுகின்றன.

R2N-CH3 + O → R2N-H + CH2O

சைற்றோகுரோம் பி450, முக்கியமான மீதைலகற்றேசுகளில் ஒன்று.[3]

உசாத்துணைகள் தொகு

  1. Clayden, J.; Greeves, N.; Warren, S.; Wothers, P. (2001). Organic Chemistry. Oxford, Oxfordshire: Oxford University Press. ISBN 0-19-850346-6.
  2. Smith, Michael B.; March, Jerry (2007), Advanced Organic Chemistry: Reactions, Mechanisms, and Structure (6th ed.), New York: Wiley-Interscience, ISBN 0-471-72091-7
  3. Roland Sigel; Sigel, Astrid; Sigel, Helmut (2007). The Ubiquitous Roles of Cytochrome P450 Proteins: Metal Ions in Life Sciences. New York: Wiley. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-470-01672-8. https://archive.org/details/ubiquitousroleso0000unse. 

மேலும் காண தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மீதைலகற்றம்&oldid=3582656" இலிருந்து மீள்விக்கப்பட்டது