மீனவர் விபத்துக் குழு காப்புறுதித் திட்டம்

இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு என இரண்டு அரசுகளும் இணைந்து தமிழ்நாட்டில் மீனவர் விபத்துக் குழு காப்புறுதித் திட்டத்தைச் செயல்படுத்துகின்றன. இத்திட்டத்திற்கான காப்புறுதி பிரிமியத் தொகையாக ஒரு மீனவருக்கு (தலா ரூ.7/- வீதம்) ஆண்டுக்கு ரூ.14/-வீதம் செலுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ், மீனவர் விபத்தில் இறந்தால் அல்லது முழுவதும் நிவர்த்தி செய்ய இயலாத முழு ஊனமடைந்தால் ரூ.50,000/-ம், பகுதி ஊனமடைந்தால் ரூ.25,000/-ம் காப்பீட்டுத் தொகையாக வழங்கப்படுகிறது.

பயன் பெறுவதற்கான தகுதிகள்

தொகு
  1. தமிழ்நாட்டிலுள்ள மீனவர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருக்கவேண்டும்.
  2. முழுநேர கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருக்கவேண்டும்.

விண்ணப்பப் படிவம்

தொகு

இந்தத் திட்டத்திற்கான விண்ணப்பப் படிவங்களை மாவட்ட மீன்துறை உதவி இயக்குநர் (கடல் வளம்), மாவட்ட மீன்துறை உதவி இயக்குநர் (உள்நாட்டு வளம்), மீன்துறை உதவி இயக்குநர் (நீர் வாழ் உயிரின வளர்ப்பு), மாவட்ட மீன்துறை உதவி இயக்குநர் (விரிவாக்கம் மற்றும் பயிற்சி)ஆகிய ஏதாவதொரு அலுவலகத்தில் பெற்று அதை முழுமையாக நிரப்பி கீழ்காணும் சான்றுகளை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

  1. மனுதாரர் விண்ணப்பம்
  2. காப்புறுதி நிறுவனம் படிவம் I, II & III
  3. மீனவர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்த சேர்க்கைப் புத்தக நகல்.
  4. மீனவர் கூட்டுறவு சங்கத் தீர்மானம்
  5. காவல் துறை முதல் தகவல் அறிக்கை
  6. காவல் துறை இறுதி விசாரணை அறிககை
  7. பிரேத பரிசோதனைச் சான்று மற்றும் இரசாயன பகுப்பாளிணிவு அறிக்கை
  8. இறப்புச் சான்று
  9. வாரிசு சான்று
  10. 18 வயதுக்கு மேற்பட்ட இதர வாரிசுதாரர்களிடமிருந்து ரூ. 10/-க்கான முத்திரைத் தாளில் தடையில்லாச் சான்று

காணாமற் போனவர்கள் எனில்

  • ரூ. 20/-க்கான முத்திரைத் தாளில் பிணை முறிவுப் பத்திரம் (ஆவணம்)
  • காரிய பத்திரிகை
  • உடன் சென்றவர்கள் வாக்கு மூலம்

உடல் ஊனமுற்றவர்கள்எனில்

  • ஊன சதவீதச் சான்று உரிய படிவத்தில்
  • ஊனத்தை தெளிவாகக் காட்டும் புகைப்படம்
  • ஊனம் தன்மை குறித்து உரிய படிவத்தில் அரசு மருத்துவரின் சான்று