மீன்கள் அன்றும் இன்றும்

மீன்கள் அன்றும் இன்றும் என்பது 1991 ஆம் ஆண்டு தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட மீன்கள் பற்றிய தமிழாய்வு நூல் ஆகும். இந்த நூலை மீன் உயிரியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற ஆய்வாளர் ச. பரிமளா எழுதியுள்ளார்.

மீன்கள் அன்றும் இன்றும்
நூல் பெயர்:மீன்கள் அன்றும் இன்றும்
ஆசிரியர்(கள்):முனைவர் ச. பரிமளா
வகை:கடல் உயிரியல்
துறை:தமிழர் கடல் உயிரியல்
காலம்:பழைய காலத்தில் இருந்து தற்காலம் வரை
இடம்:இந்தியா
மொழி:தமிழ்
பக்கங்கள்:280
பதிப்பகர்:தமிழ்ப் பல்கலைக்கழகம்
பதிப்பு:1991

இந்த நூலின் படி சங்க இலக்கியங்களில் 17 மீன்கள், பள்ளு இலக்கியங்களில் 100 மீன்கள் குறிப்பிடப்படுகின்றன. கன்னியாகுமாரி மாவட்டத்தில் வழங்கும் 920 மீன்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.[1]

உள்ளடக்கம்

தொகு

தமிழ் இலக்கியங்களில் மீன்களைப் பற்றிய குறிப்புக்கள், பாடல் பெற்ற ஆறுகள், சித்த மருத்துவத்தில் மீன்களின் பயன்பாடு, தற்கால ஆய்வுகள், மீன்களின் ஒளிப்படங்கள், அவற்றின் பெயர் பட்டியல்கள் ஆகியன இந்த நூலின் உள்ளடக்கமாக அமைகின்றன.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 நாஞ்சில் நாடன். (2011). பனுவல் போற்றுதும். திருச்சிராப்பள்ளி: தமிழினி.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீன்கள்_அன்றும்_இன்றும்&oldid=3956712" இலிருந்து மீள்விக்கப்பட்டது