மீளாக்கம் (உயிரியல்)
உயிரியலில் மீளாக்கம் அல்லது மீளுருவாக்கம் அல்லது புத்துயிர்ப்பு (regeneration) என்பது உயிர்கள் தமது பாதிக்கப்பட்ட அல்லது துண்டிக்கப்பட்ட உறுப்புகளைத் தாமாகப் புதுப்பித்துக் கொள்ளும் நிகழ்வு ஆகும். பாக்டீரியா முதல் மனிதர்கள் வரை மீளுருவாக்கும் திறன் உள்ளது. பொதுவாக மீளாக்கத்தில் பாதிக்கப்பட்ட திசுக்களுக்கு மட்டும் புதிய திசுக்கள் உருவாகி முழுமையற்ற உறுப்பாக உருவாகிறது. ஒரு சில உயிரினங்களில் மட்டும் முழுமையான உறுப்புகளாகவே வளர்கின்றன. தொடக்க நிலையில் டிஎன்ஏ தொகுப்பின் மூலக்கூறு செயல் முறைகளால் மீளாக்கம் நடுநிலைப்படுத்தப்படுகிறது.