முகநூல் தூதுவன்
முகநூலை அடிப்படையாக கொண்ட செய்தி பரிமாற்ற செயலி
முகநூல் தூதுவன் (Facebook Messenger) [பரவலாக பேஸ்புக் மெசஞ்சர் அல்லது மெசஞ்சர்[1] என அழைக்கப்படும் இது ஓர் செய்தி பரிமாற்ற செயலி ஆகும். 2008 ஆம் ஆண்டில் முகநூல் சேட் என துவங்கப்பட்ட இந்த செயலியானது 2010 இல் சீரமைக்கப்பட்டு 2011 இல் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் பயன்படும் செயலியாக வெளியிடப்பட்டது.
உருவாக்குனர் | முகநூல் |
---|---|
தொடக்க வெளியீடு | ஆகத்து 9, 2011 |
இயக்கு முறைமை | ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், விண்டோசு திறன்பேசி, விண்டோசு 8 , 10 |
கோப்பளவு | ~276 மெகாபைட் ஐஓஎஸ் ~36 எம்பி (ஆண்ட்ராய்டு) |
உரிமம் | இலவசம் |
இணையத்தளம் | www www |
வரலாறு
தொகுமார்ச் 2008 இல் உடனடி தகவல்பரிமாற்ற செயலியினை பரிசோதனை முயற்சியில் முகநூல் நிறுவனம் செய்தது. [2][3] பின் அதற்கு முகநூல் சேட் எனப் பெயரிட்டு ஏப்ரல் 2008 இல் பயனாளர்கள் பயன்படுத்த வெளியிடப்பட்டது.[4][5] அக்டோபர் 2011 இல் பிளாக்பெர்ரியில் பயன்படும் வகையில் செயலி வெளியானது..[6][7]
சான்றுகள்
தொகு- ↑ Stenovec, Timothy (August 13, 2014). "The Real Reason Facebook Is Forcing You To Download Messenger". The Huffington Post. AOL. பார்க்கப்பட்ட நாள் March 24, 2017.
- ↑ Arrington, Michael (March 14, 2008). "Facebook To Launch Instant Messaging Service". TechCrunch. AOL. பார்க்கப்பட்ட நாள் June 2, 2017.
- ↑ McCarthy, Caroline (March 14, 2008). "Report: Facebook IM service will debut soon". CNET. CBS Interactive. பார்க்கப்பட்ட நாள் June 2, 2017.
- ↑ Hendrickson, Mark (April 6, 2008). "Facebook Chat Launches, For Some". TechCrunch. AOL. பார்க்கப்பட்ட நாள் June 2, 2017.
- ↑ Farber, Dan (April 6, 2008). "Facebook Chat begins to roll out". CNET. CBS Interactive. பார்க்கப்பட்ட நாள் June 2, 2017.
- ↑ Protalinski, Emil (October 19, 2011). "Facebook Messenger version 1.5 is out: BlackBerry, iOS 5 support". ZDNet. CBS Interactive. பார்க்கப்பட்ட நாள் March 24, 2017.
- ↑ Trenholm, Richard (October 21, 2011). "Facebook Messenger now on BlackBerry in new blow to BBM". CNET. CBS Interactive. பார்க்கப்பட்ட நாள் March 24, 2017.