முகமது எர்வான்

இந்தோனேசிய சதுரங்க வீரர்

முகமது எர்வான் (Mohamad Ervan) இந்தோனேசிய நாட்டைச் சேர்ந்த ஒரு சதுரங்க வீரர் ஆவார். 1992 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். இவருக்கு 2019 ஆம் ஆண்டில் பன்னாட்டு சதுரங்க மாசுட்டர் பட்டம் வழங்கப்பட்டது. [1]

முகமது எர்வான்
Mohamad Ervan
நாடுஇந்தோனேசியா
பிறப்புமே 15, 1992 (1992-05-15) (அகவை 32)
பட்டம்பன்னாட்டு மாசுட்டர் (2019)
உச்சத் தரவுகோள்2404 (மார்ச்சு 2023)
பதக்கத் தகவல்கள்
ஆண்கள் சதுரங்கம்
நாடு  இந்தோனேசியா
தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2013  நைப்பிதாவோ பாரம்பரிய அதி விரைவு அணி
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2013  நைப்பிதாவோ பாரம்பரிய ஆண்கள் சதுரங்கம்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2019 பிலிப்பீன்சு ஆசிய ஆண்கள் சதுரங்கம்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2021  ஆனோய் ஆண்கள் சதுரங்கம்

சதுரங்க வாழ்க்கை

தொகு

2018 ஆம் ஆண்டில் முகமது எர்வான் இந்தோனேசிய சதுரங்க வெற்றியாளர் பட்டத்தை வென்றார். [2]

2021 ஆம் ஆண்டு ஆசிய தனிநபர் கலப்பு சதுரங்க வெற்றியாளர் போட்டியில் 36 ஆவது தரநிலையில் இருந்த இவர் ஆறாவது இடத்தைப் பிடித்த பிறகு, 2021 ஆம் ஆண்டு சதுரங்க உலகக் கோப்பை போட்டிக்குத் தகுதி பெற்றார் [3] [4] அங்கு இவர் முதல் சுற்றில் நோடிர்பெக் அப்துசட்டோரோவுக்கு எதிராக சமன் செய்தார். இவர்களின் முதல் ஆட்டத்தில் தோற்கடிக்கப்பட்டார். ஆனால் இவர்களது இரண்டாவது ஆட்டத்திற்கு முன் கோவிட்-19 சோதனையில் தோல்வியடைந்தார். தனது எதிராளியிடம் சமனை ஒப்படைத்தார். [5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Ervan, Mohamad". பார்க்கப்பட்ட நாள் 2021-08-18.
  2. "IndonesiaBase » Who Won Indonesia National Championships?" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-18.
  3. "IM Mohamad Ervan Melesat Pimpin Asian Individual Hybrid Chess Championships 2021". பார்க்கப்பட்ட நாள் 2021-08-18.
  4. "Luar Biasa, IM Mohamad Ervan Lolos ke Piala Dunia Catur". பார்க்கப்பட்ட நாள் 2021-08-18.
  5. "Pecatur Mohamad Ervan gagal bertanding karena tak lolos tes covid-19". பார்க்கப்பட்ட நாள் 2021-08-18.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகமது_எர்வான்&oldid=3863478" இலிருந்து மீள்விக்கப்பட்டது