முகமது சமாதானி (சிற்றிதழ்)

முகமது சமாதானி இந்தியா காரைக்காலிலிருந்து 1888ம் ஆண்டில் வெளிவந்த ஓர் இசுலாமிய வார இதழாகும்.

ஆசிரியர்

தொகு
  • காசிம் முகைதீன் இராவுத்தர் குலாம் காதிறு நாவலர்.

இவர் சனவரி 23, 1908ல் காலமானார்.

உள்ளக்கம்

தொகு

19ம் நூற்றாண்டில் இசுலாமியர்களிடையே இஸ்லாத்தைப் பற்றிய விளக்கம் குறைவாகவே காணப்பட்டது. இஸ்லாமிய கொள்கைக் கோட்பாடுகளுக்கு விளக்கமளிக்கும் ஆக்கங்கள் இடம்பெற்றிருந்தன. மேலும், இக்காலகட்டத்தில் இசுலாமியர்களின் நிலை தொடர்பாகவும் இசுலாமியர்களை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் விளக்கக் கட்டுரைகளும், செய்திகளும் இடம்பெற்றிருந்தன. கஸீதாக்கள் எனப்படும் இசுலாமியப் பாக்களுக்கான விளக்கங்களும் காணப்பட்டன.