முகமது பாரூக்கு சா
முகமது பாரூக்கு சா (Mohammad Farooq Shah) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். காசுமீர் மாநிலத்தில் பொதுவாக காணப்படும் மிர்வைசு எனப்படும் தலைமைப் பூசாரியாக இவர் அறியப்படுகிறார். சம்மு காசுமீர் மாநிலத்தின் அவாமி நடவடிக்கைக் குழுவின் தலைவராக இருந்தார், சம்மு மற்றும் காசுமீரில் உள்ள வேறுபட்ட அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு மோதலை தீர்த்துவைக்க அவாமி குழு செயல்பட்டது. . [1] [2]
முகமது பாரூக் சா 1990 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதியன்று சிறீநகரின் நாகீனில் உள்ள அவரது இல்லத்தில் துப்பாக்கிதாரிகளால் படுகொலை செய்யப்பட்டார். இசுபுல் முசாகிதீன் தீவிரவாதி முகமது அயூப் தார் கொலைக்கு தண்டனை பெற்றார். [3] 2010 ஆம் ஆண்டில் இந்திய உச்ச நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தது.
2023 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் தேதியன்று சம்மு மற்றும் காசுமீர் காவல்துறை மிர்வைசு மௌல்வி முகம்மது பாரூக் படுகொலை வழக்கில் "மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக கைது செய்யப்படாமல் இருந்த" இரண்டு இசுபுல்-முசாகிதீன் தீவிரவாதிகளை கைது செய்ததன் மூலம் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. [4]
பத்திரிகையாளர் சந்திப்பில், கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளில் மறைந்த மிர்வைசின் படுக்கையறைக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் அடங்குவதாக காவல்துறை தெரிவித்தது. .
மேற்கோள்கள்
தொகு- ↑ Weaver, Mary Anne (1983-06-10). "Strategic Kashmir is divided by conflicting loyalties". பார்க்கப்பட்ட நாள் 2017-04-17.
- ↑ BAZAZ, BHUSHAN. "My memories with the man". பார்க்கப்பட்ட நாள் 2022-01-02.
- ↑ Murder Suspect Convicted, The Times of India, 22 July 2010.
- ↑ Two Hizb militants arrested for Mirwaiz Moulvi Farooq’s assassination, The Kashmir Pulse, 16 May 2023.