முகமது யாசர்

இந்திய தடகள வீரர்

முகமது யாசர் (Mohd Yasser) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தடகள விளையாட்டு வீரர் ஆவார். 1993 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 24 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். ஆண்கள் குண்டு எறிதல் விளையாட்டில் முழங்கைக்கு கீழே அல்லது மேலே பாதிக்கப்பட்டுள்ளோருக்கான எப்46 பிரிவில் இந்தியாவின் சார்பாக போட்டியிடுகிறார்.

முகமது யாசர்
Mohd Yasser
தனிநபர் தகவல்
பிறப்பு24 திசம்பர் 1993 (1993-12-24) (அகவை 30)
பதான் குர்து, இந்தியா
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுகுண்டு எறிதல்
மாற்றுத்திறன் வகைப்பாடுஎப்-46
பயிற்றுவித்ததுஅர்மிந்தர்பால் சிங் குமான்
சாதனைகளும் விருதுகளும்
தேசிய இறுதி18ஆவது தேசிய இணை தடகள வெற்றியாளர் போட்டிகள், பஞ்சுகுளா
பதக்கத் தகவல்கள்
தடகளம்
நாடு  இந்தியா
உலக இணை தடகள வெற்றியாளர்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2021 துபாய் குண்டு எறிதல் - எப்46
ஆசிய இணை விளையாட்டுகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2018 இயாகர்த்தா ஆண்கள் குண்டு எறிதல் - எப்46
தேசிய இணை தடகள வெற்றியாளர்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2018 பஞ்சுகுளா குண்டு எறிதல் - எப்46

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

யாசருக்கு 8 வயதாக இருந்தபோது தனது கையை இழந்தார். [1]

தொழில்

தொகு

இந்தோனேசியாவின் இயாகார்த்தாவில் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய இணை விளையாட்டுப் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். அங்கு இவர் வெண்கலப் பதக்கம் வென்றார். [2] உலக இணை தடகளப் போட்டியின் 2021 ஆம் ஆண்டுக்கான துபாய் கிராண்டு பிரிக்சில் யாசர் 14.58 மீ தூரம் குண்டு எறிந்து தங்கப் பதக்கத்தை வென்றார். [3]

2018 ஆம் அரசாங்கத்தால் வாக்குறுதியளிக்கப்பட்ட ஊக்கத் தொகை ரூபாய் 50 இலட்சம் கிடைக்காததற்காக யாசர் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். இத்தொகை இறுதியில் 2020 ஆம் ஆண்டு யாசருக்கு வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Nearly 2 years after Jakarta exploits, para-athletes get their cash reward" (in ஆங்கிலம்). 2020-07-24. பார்க்கப்பட்ட நாள் 2021-09-05.
  2. "Medal Audit - Para Athletics". Archived from the original on 2019-02-03. பார்க்கப்பட்ட நாள் 2024-01-19.
  3. "12th Fazza Championships World Para Athletics Grand Prix 2021 Results" (PDF).

புற இணைப்புகள்

தொகு
  • Mohd Yasser at the International Paralympic Committee
  • Mohd Yasser on Instagram
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகமது_யாசர்&oldid=4108525" இலிருந்து மீள்விக்கப்பட்டது