முகம்மது நவாசு பாட்டி

பாக்கித்தானிய நீதிபதி

முகம்மது நவாசு பாட்டி (Muhammad Nawaz Bhatti</nowiki>) பாக்கித்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞரும் நீதிபதியுமாவார். சேகுபுரா மாவட்டத்தின் சாங்க்லா மலைப் பகுதியைச் சேர்ந்த இவர் 1948 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் பிறந்தார். பாக்கித்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணம் லாகூர் உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் பஞ்சாப் மற்றும் பாக்கித்தான் அரசாங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நன்கு அறியப்பட்ட குற்றவியல் வழக்கறிஞராகவும் ஒரு சட்ட அதிகாரியும் ஆவார்.


1998-1999 ஆம் ஆண்டில் இவர் [1] பஞ்சாப் கூடுதல் மாநில அரசுத் தலைமை வழக்குரைஞர் பதவியில் நியமிக்கப்பட்டார் . அவர் ஜனவரி 12, 2004 ஆம் ஆண்டு சனவரி மாதம் 12 ஆம் தேதியன்று முல்தானில் உள்ள லாகூர் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பதவியேற்றபோது, 2000 முதல் 2004 வரை பாக்கித்தானின் துணை அரசுத் தலைமை வழக்குரைஞராக [2] [3] நியமிக்கப்பட்டார்.

இவர் நீதிபதியாக பணியாற்றிய போது 2006 ஆம் ஆண்டு சூலை மாதம்10 ஆம் தேதி முல்தான் விமான நிலையம் அருகே விமான விபத்தில் இறந்தார். [4] [5] விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தீப்பிடித்து, விமான நிலையத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோதுமை வயலில் தரையிறங்கியது. [6] இவரது இறுதிச் சடங்கில் சக நீதிபதிகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். முகம்மது நவாசு பாட்டி சங்லா மலையில் அடக்கம் செய்யப்பட்டார். [7] இவரது மகன் அமீர் நவாசு பாட்டியும் வழக்கறிஞராகவும், லாகூர் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் உறுப்பினராகவும் உள்ளார்.

மேற்கோள்கள் தொகு

  1. The All Pakistan Legal Decisions, Volume 52, Issue 3, Abdul Hamid, Mohammad Ashraf, 2000, page 24
  2. Pakistan Labour Cases, Volume 44, Issues 5-8, Malik Muhammas Saeed, 2003, pge 708
  3. "Former Hon'ble Judge's". sys.lhc.gov.pk. Archived from the original on March 17, 2015. பார்க்கப்பட்ட நாள் August 23, 2015.
  4. "2006 Fokker crash SHO told to submit report about registration of case". dawn.com. June 18, 2015. http://www.dawn.com/news/1188912. பார்த்த நாள்: August 23, 2015. 
  5. "LHC stopped from moving against judge's family". dawn.com. August 2, 2007. http://www.dawn.com/news/259292/lhc-stopped-from-moving-against-judge-s-family. பார்த்த நாள்: August 23, 2015. 
  6. "Families denied accurate compensation". tribune.com.pk. September 5, 2010. http://tribune.com.pk/story/46761/families-denied-accurate-compensation/. பார்த்த நாள்: August 23, 2015. 
  7. "Multan shut to mourn plane crash victims". daily times.com.pk. July 12, 2006. http://archives.dailytimes.com.pk/national/12-Jul-2006/multan-shut-to-mourn-plane-crash-victims. பார்த்த நாள்: August 23, 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகம்மது_நவாசு_பாட்டி&oldid=3752692" இலிருந்து மீள்விக்கப்பட்டது