முகவை (beaker) என்பது, ஆய்வுகூடங்களில், நீர்மங்களை (திரவங்களை) வைப்பதற்குப் பயன்படும் எளிமையான கொள்கலம் ஆகும். முகவையின் அடிப்படைத் தேவையானது தான் கொள்ளும் நீர்மத்தால் தாக்குறலாகாது (வேதியியல் வழியோ மற்றும் வேறுவழிகளிலோ கரைத்தல், அரித்தல் முதலியன நிகழாமல் இருத்தல் வேண்டும்). முகவையானது எந்தவிதமான உருளை வடிவம் கொண்டதாக இருந்தாலும் இதன் அடி தட்டையானது (பெரும்பாலானவை). முகவைகள், சில மில்லிலீட்டர்கள் கொள்ளளவிலிருந்து, பல லீட்டர்கள் வரை கொள்ளக்கூடியதாகப் பல்வேறு அளவுகளில் கிடைக்கின்றன.

மூன்று முகவைகள்

இவை கண்ணாடியாலோ, பிளாஸ்ட்டிக்கினாலோ செய்யப்படலாம். கண்ணாடி முகவைகள் பெரும்பாலும் பைரெக்ஸ் கண்ணாடியினாலேயே செய்யப்படுகின்றன. அமிலம் போன்ற அரிக்கக்கூடிய திரவங்களை வைப்பதற்கான முகவைகள் டெஃப்லான் என்னும் பொருளினால் அல்லது அரிபடாத் தன்மை கொண்ட வேறு பொருட்களினால் ஆக்கப்படுகின்றன.

உள்ளேயுள்ள நீர்மங்கள் மாசடைவதைத் தடுப்பதற்கும், ஆவியாதல் மூலமான இழப்பைத் தடுப்பதற்கும், முகவைகள் மணிக்கூட்டுக் கண்ணாடிகளால் மூடி வைக்கப்படுகின்றன. பெரும்பாலும் முகவைகளில் அளவு குறிக்கப்படுகின்றது. முகவையின் வெளிப்புறத்தில் இடப்படும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=முகவை&oldid=3502701" இலிருந்து மீள்விக்கப்பட்டது