முக்காழ்

முக்காழ் என்பது பண்டைக்கால அணிகலன்களில் ஒன்று.

முக்காழ் என்பது பண்டைக்கால அணிகலன்களில் ஒன்று. இது யானை முகத்தில் முக்கோண வடிவில் தொங்கும் ஓடை என்னும் அணிகலனைப் போன்றது. இது துணியின்மீது வயிர மணிகளைக் கோத்துச் செய்யப்படும். தாய்மார் தம் கைகளால் இதனைப் புனைந்து குழந்தையின் கழுத்தில் தொங்கவிடுவர். [1] [2]

மை படு சென்னி மழ களிற்று ஓடை போல்,
கை புனை முக்காழ் கயந் தலைத் தாழ,- கலித்தொகை 86

அடிக்குறிப்பு தொகு

  1. கயந் தலை மின்னும் கதிர் விடு முக் காழ்,
    பயந்த எம் கண் ஆர - கலித்தொகை 80
  2. மை படு சென்னி மழ களிற்று ஓடை போல்,
    கை புனை முக்காழ் கயந் தலைத் தாழ,- கலித்தொகை 86
"https://ta.wikipedia.org/w/index.php?title=முக்காழ்&oldid=1623307" இலிருந்து மீள்விக்கப்பட்டது