முக்கியர் என்ற சாதி அமைப்பு, யாழ்ப்பாணத்தில் உயர் சாதிகளில் ஒன்றாக வரையறுக்கப்படுகிறது. இராமாயணத்தில் இராமனுக்கு படகு ஓட்டிய முக்குகன் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் அந்த சாதி அமைப்பினர் என்று கூறப்படுகிறது. இதனால் அவர்கள் முக்கியர் என்று வரையறுக்கப்படுகின்றனர். கடற்தொழில், கடலில் மூழ்கி முத்தெடுத்தல், கப்பல் வேலை போன்றன இவர்களின் பிரதான தொழிலாக அமைகிறது. யாழ்ப்பாணத்தின் பொன்னாலைச் சந்தி, வடலியடைப்பு, நவாலி, தொல்புரம், சுழிபுரம், கோவிலாக்கண்டி,காரைநகர் போன்ற பல இடங்களிலும் இந்தச் சாதியமைப்பினர் பூர்வீகக் குடிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=முக்கியர்&oldid=3533103" இலிருந்து மீள்விக்கப்பட்டது