முக்கோடு
முக்கோடு, ≡ (triple bar) என்பது ஒரு குறியீடு. இந்தக் குறியீட்டில் மூன்று கோடுகள் ஒன்றின்கீழ் ஒன்றாக அமைந்திருக்கும். இது கணிதக் குறியீடான சமநிலைக் குறியீட்டுடன்(=) மற்றொரு கோட்டை வரைந்ததைப் போலிருக்கும். இந்தக் குறியீட்டுக்கு ஒருங்குறியில் 2261 என்ற இடம் வழங்கப்பட்டுள்ளது.[1] இதன் எதிர்மறை பொருளை ≢ என்ற குறியீடு உணர்த்துகிறது[1].
இந்தக் கட்டுரை சிறப்பு எழுத்துகளை கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ, கட்டங்களோ அல்லது மற்ற குறியீடுகளோ தெரியலாம்.. |
பயன்பாடு
தொகு- கணிதத்தில் சமான உறவைக் குறிப்பதற்கு பயன்படுகிறது.
- வேதியியல்: அணுக்களுக்கு இடையிலான முப்பிணைப்பை குறிக்கப் பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக, HC≡CH என்னும் குறியீடு அசிட்டிலீனை குறிக்கும்.[2]
- வலைத்தளங்களில் முதன்மை பட்டியலை குறிக்கிறது.
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 New Hart's Rules: The Oxford Style Guide, Oxford University Press, 2014, p. 295, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-957002-7.
- ↑ Olmsted, John; Williams, Gregory M. (1997), Chemistry: The Molecular Science, Jones & Bartlett Learning, p. 86, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8151-8450-8.