முக்கோண பெட்டக வடிவ மூலக்கூறு வடிவியல்

வேதியலில், முக்கோணப் பெட்டக வடிவ மூலக்கூறு வடிவியல் (trigonal prismatic molecular geometry) ஆனது, ஒரு அணுவை மையமாக கொண்டு, அதனைச் சுற்றி ஒரு முப்பட்டக வடிவில் ஆறு அணுக்கள், அணுக் குழுக்கள் அல்லது ஈனிகளை அந்த முப்பட்டகத்தின் முனைகளில் அமைந்தவாறு கொண்டுள்ள சேர்மங்களின் வடிவை விளக்குகிறது.

முக்கோண பெட்டக வடிவ மூலக்கூறு வடிவியல்
எடுத்துக்காட்டுகள்ஹெக்சாமெத்தில் டங்ஸ்டன் (W(CH3)6)
புள்ளிசார் படிகக்குலம்D3h
அணைவு எண்6
μ (முனைவு)0

எடுத்துக்காட்டுகள்

தொகு

முக்கோண பெட்டக வடிவமுடைய மூலக்கூறின் முதல் உதாரணம் ஹெக்சாமெத்தில் டங்ஸ்டன்(W(CH3)6) ஆகும்.[1]

வேறுசில இடைநிலை உலோகங்கள் முக்கோண பெட்டக வடிவமுடைய மூலக்கூறுகளை உருவாக்குகின்றன:

Mo(CH3)6, Re(CH3)6 மேலும் Ta(CH3)-6 ;மற்றும் Zr (CH3)2-6 போன்ற அயனிகள்.[2]

Mo(S−CH=CH−S)3 என்ற மூலக்கூறில் S-CH=CH-S என்ற உறுப்பானது இருமுனைய ஈனியாக செயல்படுகிறது. இதில் இரு S-அணுக்களும் உலோக அணுவினை இணைக்கிறது.[2] இங்கு மாலிப்டினியத்தை சுற்றி அமைந்துள்ள ஆறு கந்தக அணுக்களின் அணைவு வடிவியல் அமைப்பானது மாலிப்டினம் டை சல்பைடுவின் நீட்டிக்கப்பட்ட அமைப்பினை ஒத்துள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. Housecroft, C. E.; Sharpe, A. G. (2004). Inorganic Chemistry (2nd ed.). Prentice Hall. p. 725. ISBN 978-0-13-039913-7.
  2. 2.0 2.1 Housecroft, C. E.; Sharpe, A. G. (2004). Inorganic Chemistry (2nd ed.). Prentice Hall. ISBN 978-0-13-039913-7.

Housecroft, C. E.; Sharpe, A. G. (2004). Inorganic Chemistry (2nd ed.). Prentice Hall. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0130399137.