முக்தி பவன், காசி
முக்தி பவன் அல்லது மோட்ச இல்லம் (Mukti Bhawan, commonly known as Moksha Bhawan), இந்துக்களின் உயரிய புனித தலமான கருதப்படும் கங்கை ஆறு பாயும் வாராணசி எனப்படும் காசி இறந்து, சடலத்தை எரியூட்டுவதால் கிடைக்கும் சாம்பலை கங்கை ஆற்றில் கரைப்பதால், தாங்கள் செய்த பாவங்கள் விலகி, முக்தி கிடைக்கும் என்பது இந்துக்களின் தொன்ம நம்பிக்கையாகும்.
மக்கள் முக்தி அடைவதற்காக புனித நகரமான காசியில் தங்கள் வாழ்க்கையின் இறுதி நாட்களைக் கழிக்க விரும்பும் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்குமிடமாக முக்தி பவன் செயல்படுகிறது. நிரந்தரமாக நோய்வாய்ப்பட்டு மரண படுக்கையில் உள்ளவர்களுக்கு இங்கு தங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.[1]
காசி விஸ்வநாதர் கோயில் வளாகப் பகுதியில், டால்மியா அறக்கட்டளையால், 1908-இல் 12 அறைகளுன் கூடிய இரட்டை மாடிகளுடன் நிறுவப்பட்டது. தற்போது 40 படுக்கைகளுடன் கூடிய புதிய முக்தி பவனை பராமரிக்க நான்கு பணியாளர்கள் மற்றும் ஒரு மேலாளர் உள்ளனர்.
காசியில் தன் வாழ்நாள் முடியும் வரை முக்தி பவனில் தங்குவதற்கு கட்டணம் நாள் ஒன்றுக்கு ரூபாய் 20 வசூலிக்கப்படுகிறது. இறக்கும் நிலையில் உள்ளவருக்கு உதவியாளர் ஒருவர் இருக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இறக்காமல் உடல் நலத்துடன் இருப்பவர்களை முக்தி பவனை விட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார்கள்.
இறப்பிற்கு பிறகு சடலத்தை கங்கை ஆற்றில் நனைத்து, மணிகர்ணிகா படித்துறையில் எரியூட்டிய பிறகு கிடைக்கும் சாம்பலை கங்கை ஆற்றில் கரைத்தால் மோட்சம் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை ஆகும்.
முக்தி பவனின் நோக்கம்
தொகுமுக்தி பவனை நடத்துவதன் முக்கிய நோக்கம் வாரணாசியில் மோட்சத்தை அடைய விரும்பும், ஆனால் அவர்களின் இறுதி நாட்களில் தங்குவதற்கு இடம் இல்லாத ஏழை மக்களுக்கு அடைக்கலம் கொடுப்பதாகும். இந்துக்கள் அனைவரும் சாதி வேறுபாடு இன்றி முக்தி பவனுக்கு வரவேற்கப்படுகிறார்கள். முன்பதிவுகள் எதுவும் இல்லாததால், முக்தி பவன் ஒரு விடுதி அல்ல.[2]