முசி ஆறு
முசி ஆறு, கிருஷ்ணா ஆற்றின் துணை ஆறாகும். இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது. இது அம்மாநிலத்தின் ஹைதிராபாத் நகர் வழியாகச் சென்று அந்நகரத்தை பழைய நகரம், புதிய நகரம் என இரண்டாகப் பிரிக்கிறது. இவ்வாற்றில் ஹிமாயட் சாகர் மற்றும் ஓஸ்மான் சாகர் என்ற இரு அணைகள் கட்டப்பட்டு ஹைதிராபாத் நகருக்கான குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.[1][2]
நதி மூலம்
தொகுஇந்த ஆறு அனந்தகிரி மலையில் உற்பத்தியாகிறது. இது ஹைதிராபாத்திற்கு தெற்கே உள்ள விக்ராபாத் , ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ளது. இந்த ஆறு 240 கிலோமீட்டர் தூரம் கடந்ததும் கிருஷ்ணா நதியில் இணைகிறது. 1908-ல் இந்நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.[3].வெள்ளப்பெருக்கைத் தடுக்கவே ஹிமாயட் சாகர் மற்றும் ஓஸ்மான் சாகர் என்ற ஏரிகள் அமைக்கப்பட்டன.
பாலங்களும் சாலைகளும்
தொகுஇந்நதியின் மேல் பல பாலங்கள் உள்ளன. இதில் புராண புல் (old bridge) என்ற பாலம் பழமையானது ஆகும். இது 1579 -ல் கட்டப்பட்டது. உயர் நீதிமன்றம் அருகே நயா புல் (new bridge) உள்ளது.
ஆற்றங்கரையிலுள்ள முக்கிய இடங்கள்
தொகு- ஆந்திரப்பிரதேச உயர் நீதிமன்றம்.
- சாலர் ஜுங் அருங்காட்சியகம்.
- மாநில மைய நூலகம்
- ஒஸ்மானியா பொது மருத்துவமனை
- மஹாத்மா காந்தி பேருந்து நிலையம்.
- நகரக் கல்லூரி.
மேற்கோள்கள்
தொகு- ↑ Murali, D. "Floods proved a blessing in disguise". The Hindu இம் மூலத்தில் இருந்து மே 14, 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060514124147/http://www.hindu.com/pp/2006/04/22/stories/2006042200130300.htm. பார்த்த நாள்: July 17, 2012.
- ↑ Shahid, Sajjad (30 September 2012). "Sitamber: the harbinger of torment". The Times of India இம் மூலத்தில் இருந்து 9 ஆகஸ்ட் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130809131747/http://articles.timesofindia.indiatimes.com/2012-09-30/hyderabad/34177011_1_musi-bus-terminus-ends-today. பார்த்த நாள்: 30 September 2012.
- ↑ Ifthekhar, J.S (28 September 2012). "Remembering the deluge of 1908". The Hindu. http://www.thehindu.com/news/cities/Hyderabad/remembering-the-deluge-of-1908/article3944923.ece. பார்த்த நாள்: 30 September 2012.