முடச்சிக்காடு அய்யனார் கோவில்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தஞ்சாவூர் மாவட்டத்தின் பேராவூரணி வட்டத்தில் காவிரி ஆற்றின் கடைமடைப்பகுதியில் அமைந்துள்ள கிராமம் முடச்சிக்காடு. இந்த ஊரின் காவல் தெய்வமாக விளங்கி கிழக்கு எல்லையில் அருள்மிகு அம்மையப்ப அய்யனார் ஆலயமும் அமைந்துள்ளது. இந்த திருக்கோவில் முடச்சிக்காட்டிற்கும் வீரியன்கோட்டை கிராமத்திற்கும் இடையில் பரந்து பட்ட வயல் வெளியில் அமைந்துள்ளது.
மூன்று ஆண்டிற்கு ஒரு முறை இந்த கோவில் குதிரை எடுப்பு திருவிழா பிரசித்தி பெற்றது. பேராவூரணி அருகில் அமைந்துள்ள நீலகண்டபுரத்தில் இருந்து குதிரை எடுத்து வந்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவார்கள்.
முடச்சிக்காட்டில் அய்யனார் கோவில் கிராமக் கோவிலாக தொன்று தொட்டு வழிபாட்டில் உள்ளது. முடச்சிக்காடு அய்யனார் ஆலயத்தில் அய்யனார் சன்னிதிக்கு அருகில் பனைமரத்தின் நிழலில் அரிவாளுடன் முறுக்கிய மீசையுடன் காட்சி தருகிறார் முடச்சிக்காடு கருப்பர்.