முடிவிலி குறியீடு
முடிவிலி குறியீடு(Infinity symbol : ∞) என்பது முடிவிலியின் கருத்தைக் குறிக்கும் ஒரு கணிதக் குறியீடு ஆகும்.[1]. இக் குறியீடு, இதேபோன்ற வடிவங்கொண்ட, இயற்கணித வடிவவியலில் ஆய்வு செய்யப்பட்ட லெம்னிஸ்கேட்டு வளைவுகளின் (எண் 8 அல்லது ∞-வடிவ வளைவுகள்) பெயரால், "லெம்னிஸ்கேட்டு" என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் கால்நடை வணிகக் குறியிடலில் "சோம்பேறி எட்டு" என்றும் அழைக்கப்படுகிறது. [2]
முடிவிலி குறியீடு | |
---|---|
ஒருங்குறியில் | U+221E ∞ INFINITY (HTML ∞ · ∞ ) |
வேறுபட்டது | |
வேறுபட்டது | U+267E ♾ PERMANENT PAPER SIGN U+26AD ⚭ திருமண குறியீடு |
வரலாறு
தொகுஇந்த சின்னம் முதன்முதலில் கணித ரீதியாக 17 ஆம் நூற்றாண்டில் ஜான் வாலிஸ் என்பாரால் பயன்படுத்தப்பட்டது. இருந்தபோதிலும் இது மற்ற பயன்பாடுகளின் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. கணிதத்தில், இது பெரும்பாலும் முடிவில்லாத மதிப்புகளைக் காட்டிலும் முடிவில்லாத செயல்முறைகளைக் குறிக்கிறது. [3]. புத்தகப் பிணைப்பில் காகிதத்தின் நீண்டகாலப் பயனிலை போன்ற பிற தொடர்புடைய தொழில்நுட்ப அர்த்தங்களையும் கொண்டுள்ளது. மேலும் நவீன மாயவாதம் மற்றும் இலக்கியத்தில், அதன் எல்லையற்ற குறியீட்டு மதிப்புக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இது வரைபட வடிவமைப்பின் பொதுவான அங்கமாக உள்ளது. உதாரணமாக நிறுவனங்களின் சின்னங்களிலும் 'மெட்டிஸ்' கொடி போன்ற பழைய வடிவமைப்புகளிலும் காணப்படுகிறது முடிவிலி சின்னமும் அதன் பல மாறுபாட்ட வடிவமைப்புகளும் பல்வேறு வரியுரு குறியாக்கங்களில் கிடைக்கின்றன. [4] [5]
வாலிஸ் இந்தக் குறியீட்டை அவர் தேர்ந்தெடுத்தற்கான காரணத்தை விளக்கவில்லை. இது ஒரு ரோமானிய எண்ணின் மாறுபட்ட வடிவமாக கருதப்படுகிறது, ஆனால் எந்த ரோமானிய எண் என்பது தெளிவாக இல்லை. ஒரு கோட்பாடு, முடிவிலி குறியீடு 100 மில்லியனுக்கான எண்ணுருவை அடிப்படையாகக் கொண்டது எனக் கூறுகிறது. இந்த 100 மில்லியனுக்கான எண்ணுருவானது, இதே முடிவிலிக் குறியீட்டை ஒரு செவ்வக சட்டகத்திற்குள் இணைக்கப்பட்ட வடிவை ஒத்திருந்தது.[6] ரோமானிய எண்ணுக்குப் பதிலாக, இது கிரேக்க எழுத்துக்களின் கடைசி எழுத்தான ஒமேகாவின் சிறிய வடிவமான ω இன் மாறுபாட்டிலிருந்து பெறப்பட்டதாக இருக்கலாம்.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ Perrin, Daniel (2007). Algebraic Geometry: An Introduction. Springer. p. 28. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84800-056-8.
- ↑ Gross, Liza (September 2016). "In search of autism's roots". PLOS Biology 14 (9): e2000958. doi:10.1371/journal.pbio.2000958. பப்மெட்:27690292.
- ↑ Crespy, Daniel; Bozonnet, Marianne; Meier, Martin (April 2008). "100 years of Bakelite, the material of a 1000 uses". Angewandte Chemie 47 (18): 3322–3328. doi:10.1002/anie.200704281. பப்மெட்:18318037.
- ↑ The mathematical work of John Wallis, D.D., F.R.S., (1616-1703) (2nd ed.). American Mathematical Society. p. 24. ISBN 0-8284-0314-7.
- ↑ Cajori, Florian (1929). "Signs for infinity and transfinite numbers". A History of Mathematical Notations, Volume II: Notations Mainly in Higher Mathematics. Open Court. pp. 44–48.
- ↑ Maor, Eli (1991). To Infinity and Beyond: A Cultural History of the Infinite. Princeton, New Jersey: Princeton University Press. p. 7. ISBN 0-691-02511-8. MR 1129467. Clegg, Brian (2003). "Chapter 6: Labelling the infinite". A Brief History of Infinity: The Quest to Think the Unthinkable. Constable & Robinson Ltd. ISBN 978-1-84119-650-3.
- ↑ Clegg, Brian (2003). "Chapter 6: Labelling the infinite". A Brief History of Infinity: The Quest to Think the Unthinkable. Constable & Robinson Ltd. ISBN 978-1-84119-650-3