முடுக்கிய ஆயுள் சோதனை

முடுக்கிய ஆயுள் சோதனை (Accelerated life testing) பொருள் அபிவிருத்தியின்போது நிகழ்த்தப்படும் சோதனை வழிமுறைகளில் ஒன்று. ஒரு பொருள் தனது வேலையைச் செய்யும்போது அது எந்த எந்த காரணிகளால் பாதிக்கப்படுமோ, அக்காரணிகளை அதிகமான அளவில் அப்பொருளின் மீது செலுத்தி இந்த சோதனை செய்யப்படும். பாரம், விகாரம், வெப்பநிலை என்பவை இக்காரணிகளுக்கு உதாரணமாகும்.பொருள் அபிவிருத்தியில் இதுகாறும் செய்யப்பட்ட தவறுகளை தெரிந்து கொள்ளவும், சாத்தியம் உள்ள தோல்விகளைப் பற்றி ஊகிக்கவும் இந்த சோதனைமுறை பொறியாளர்களுக்கு உதவுகிறது. குறுகிய காலத்தில் முடிவுகளை அறிந்துகொள்ள இந்த சோதனைமுறை உதவுவது இதன் சிறப்பு. இச்சோதனைகளின் முடிவுகளை ஆராய்வதன் மூலமாக ஒரு பொருளின் சேவைக் காலத்தையும், பராமரிப்பு இடைவெளியையும் பொறியாளர்கள் அறிவியல்ரீதியாக கணிக்க இயலும்.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. Nelson, W. (1980). "Accelerated Life Testing - Step-Stress Models and Data Analyses". IEEE Transactions on Reliability (2): 103. doi:10.1109/TR.1980.5220742. 
  2. Spencer, F. W. (1991). "Statistical Methods in Accelerated Life Testing". Technometrics 33 (3): 360–362. doi:10.1080/00401706.1991.10484846. https://archive.org/details/sim_technometrics_1991-08_33_3/page/n113. 
  3. Donahoe, D.; Zhao, K.; Murray, S.; Ray, R. M. (2008). "Accelerated Life Testing". Encyclopedia of Quantitative Risk Analysis and Assessment. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9780470061596.risk0452. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780470035498. S2CID 86534403.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முடுக்கிய_ஆயுள்_சோதனை&oldid=4174420" இலிருந்து மீள்விக்கப்பட்டது