முட்டாபுறாசர்

முட்டாபுறாசர் (Muttaburrasaurus) என்பவை புள்ளடியின தாவரவுண்ணி இடைனோசர் விலங்கினம் ஆகும். இவ் விலங்கினம் 99.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இன்றைய வடகிழக்கு ஆஸ்திரேலியாவில்[1] சீமைச்சுண்ண பெருங்காலத்தின் தொடக்கத்தில் வாழ்ந்தவை.இவ் விலங்கினம் இராப்தோதோன்றிதை (Rhabdodontidae) குடும்பத்தைச் சேர்ந்த இகுவானோதோன்றியன் (iguanodontian) மரபைச் சேர்ந்தவை ஆகும். [2] மின்மி என்ற இடைனோசர் வகையைப் போலவே இவ் விலங்கினங்களின் முழுமையான எலும்புக் கூடுகள் கிடைத்திருக்கின்றது.

சிட்னி அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ள Muttaburrasaurus langdoni எலும்புக் கூடு.
முட்டாபுறாசரின் மீளுருவாக்கப்பட்ட மாதிரி வரைபடம்.

பெயர்க் காரண்ம்

தொகு

ஆஸ்திரேலியாவின் குவின்லாந்து மாகாணத்தில் முட்டாபுறா என்ற இடத்திலேயே முதன்முறையாக இவ் விலங்கினத்தின் எலும்புக் கூடு கண்டறியப்பட்டது. அதனாலேயே இவற்றுக்கும் முட்டாபுறாசர் என பெயரிடப்பட்டுள்ளது.

குறிப்புகள்

தொகு
  1. Holtz, Thomas R. Jr. (2012) Dinosaurs: The Most Complete, Up-to-Date Encyclopedia for Dinosaur Lovers of All Ages, Winter 2011 Appendix.
  2. McDonald, A.T.; Kirkland, J.I.; DeBlieux, D.D.; Madsen, S.K.; Cavin, J.; Milner, A.R.C.; Panzarin, L. (2010). "New Basal Iguanodonts from the Cedar Mountain Formation of Utah and the Evolution of Thumb-Spiked Dinosaurs". PLoS ONE 5 (11): e14075. doi:10.1371/journal.pone.0014075. பப்மெட்:21124919. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=முட்டாபுறாசர்&oldid=2747188" இலிருந்து மீள்விக்கப்பட்டது