முட்டி உடைத்தல்
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு
முட்டி உடைத்தல் அல்லது உறியடி என்பது ஒரு தமிழர் விளையாட்டு ஆகும். பொங்கல் பண்டிகை மற்றும் கிருஷ்ண ஜெயந்தி போன்ற விழாக் காலங்களில் உறியடி ஆட்டத்தை கிராமங்களில் காண இயலும்[1]. இரண்டு கம்புகளுக்கிடைய ஒரு குறிப்பிட்ட உயரத்தில் முட்டி ஒன்றை (மண்பானையை) மஞ்சள் கலந்த நீரால் ஊற்றி, மரத்தில் அல்லது தடியில் கயிறுகளால் உயரக் கட்டுவார்கள். உடைக்க முனைபவரின் கண்கள் கட்டுப்பட்டு, திசையை குழப்பி விடுவர். முட்டியை உடைக்க ஒரு நீளமான மூங்கில் கம்பினைக் கொடுப்பார்கள். கண்களை கட்டியிருக்கும் நபர் உணர்ந்து சரியாக முட்டியை உடைத்தால் அவர் வெற்றி பெற்றவராவார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "யானைகள் நலவாழ்வு முகாமில் பொங்கல் திருவிழா உற்சாகக் கொண்டாட்டம் - உறியடி உள்ளிட்ட கிராமிய விளையாட்டுகளில் யானைகள் பங்கேற்று அசத்தியதை கண்டு வியந்த சுற்றுலாப் பயணிகள்". ஜெயா தொலைக்காட்சி செய்திகள். 16 சனவரி 2015. http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_32639.html. பார்த்த நாள்: 26 அக்டோபர் 2015.