முதன்மைத் தடுப்பரண்

அயனியாக்கும் பண்புடைய எக்சு காமா கதிர்கள் உயிருக்கு ஊறு விளைவிக்க வல்லன..அவ்வாறான கதிர்களிலிருச்து கதிரியல் துறையில் பணிபுரியும் பணியாளர்களையும் நோயாளிகளையும் பொதுமக்களையும் பாதுகாக்க வேண்டியதாக உள்ளது.கதிர்மூலத்திலிருந்து வெளிப்படும் கதிர்கள் முதன்மைக் கதிர்கள் என அறியப்படுகின்றன. நோயாளிகளிடமிருந்து அல்லது முதன்மைக் கதிர் பிற பொருட்களில் விழுந்து அப்பொருளிலிருந்து வெளிப்படும் கதிர்கள் துணைக்கதிர்கள் அல்லது இரண்டாந்தரக் கதிர்கள் எனப்படுகின்றன. முதன்மைத் தடுப்பரண் ( Primary barrier) என்பது கதிர்வீச்சு மூலத்திலிருந்து வெளிப்படும் கதிர்களைத் தடுத்து நிறுத்தப் பயன்படும் தடுப்புச் சுவர் அல்லது சேமிப்புக் கலங்களின் சுவரின் கன அளவாகும். தொலைக் கதிர்மருத்துவ துறையில்,முதன்மைக் கதிர்களைத் தடுக்க அறைச் சுவரின் கனம் ஒரு மீட்டரைவிடக் கூடுதலாக இருக்கிறது. இது கதிர் மூலத்ததின் வலிவைப் பொறுத்திருக்கிறது.இது முதன்மைத் தடுப்பரணாகும்.

'துணைக் காப்பரண் (secondary barrier) நோயாளியிடமிருந்து வெளிப்படும் சிதறிய கதிர்களைத் தடுத்து நிறுத்தப் போதுமான கனமுடையதாக இருத்தல் வேண்டும். சிதறிய கதிர்களின் செறிவு, முதன்மைக் கதிரின் செறிவில் ஒரு விழுக்காட்டை விடவும் குறைவாகவே உள்ளது. எனவே துணைக் காப்பரணின் சுவர் கனம் குறைவாக இருந்தாலே போதுமானது.

BARC-notes

"https://ta.wikipedia.org/w/index.php?title=முதன்மைத்_தடுப்பரண்&oldid=2746037" இலிருந்து மீள்விக்கப்பட்டது