முதலாம் உலகப்போர் நினைவுச்சின்னம் (திருச்சிராப்பள்ளி)

முதலாம் உலகப் போர் நினைவுச் சின்னம் (திருச்சிராப்பள்ளி) (World War I Memorial (Tiruchirappalli)) என்பது இந்திய நாட்டிலுள்ள தமிழ்நாடு மாநிலத்தில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள காந்தி சந்தைக்கு எதிரில் முதலாம் உலக போருக்கான நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் நினைவுச் சின்னம் திருச்சிராப்பள்ளி போர் வீரர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டு இருக்கிறது.

முதலாம் உலகப் போர் நினைவுச் சின்னம்
World War I Memorial
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி
முதலாம் உலகப்போரில் உயர் நீத்த திருச்சிராப்பள்ளி வீரர்கள் நினைவாக அமைக்கப்பட்டது.
திறப்பு1919
அமைவிடம்10°48′56″N 78°41′48″E / 10.8155°N 78.6967°E / 10.8155; 78.6967
மொத்த
நினைவு
கூரப்பட்டோர்
41

வரலாறு

தொகு

திருச்சிராப்பள்ளியில் இருந்து சுமார் 302 வீரர்கள் பிரித்தானிய இந்திய ராணுவத்தின் சார்பாக முதலாம் உலகப் போரில் பங்கேற்றனர். இதில் 41 வீரர்கள் போரின் பொழுது வீரமரணமடைந்தனர். அந்தப் படை வீரர்களின் நினைவாக, பின்னர் அரசாங்கம் ஒரு பெரிய கடிகாரத்தை [1] திருச்சிராப்பள்ளியில் நினைவு சின்னமாக அமைத்தது.

பராமரிப்பு

தொகு

கடிகார கோபுரம் என அனைவராலும் அறியப்பட்ட இந்த நினைவுச் சின்னம் சரியான பராமரிப்பு இல்லாமல் இருந்தது. அந்த நேரத்தில், பர்மிய அகதிகள் உட்பட சுமார் 25 வர்த்தகர்கள், நினைவு சின்னத்தை சுற்றியுள்ள இடங்களை ஆக்கிரமித்து அங்கு தங்கள் கடைகளை நிரந்தரமாக அமைத்துக் கொண்டார்கள். இதனால் நினைவு சின்னத்தை தடையின்றி வந்து பார்க்க இடையூறாக அமைந்தது[2]. பல ஆண்டுகளுக்கு பிறகு, 27 பிப்ரவரி 2013 அன்று திருச்சி மாநகராட்சி , முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பிற சேவை அமைப்புகளின் தொடர் கோரிக்கைகளை ஏற்று நினைவு சின்னத்தை சீரமைக்க முடிவு செய்தது. அங்கு ஆக்கிரமிப்பு செய்து இருந்த கடைகளின் (பர்மிய அகதிகள் நடத்தப்படும் கடைகளைத் தவிர்த்து) உரிமத்தை இரத்து செய்தனர் மற்றும் நினைவுச் சின்னத்தை சுற்றி இருந்த கடைகள் இடிக்கப்பட்டு ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டன.[3]

மேற்கோள்கள்

தொகு

இவற்றையும் காண்க

தொகு