முதலாம் சிவமாறன்

முதலாம் சிவமாறன் (679–726) என்பவன் மேற்கு கங்க மரபைச்சேர்ந்த மன்னன் இவன் இவனுக்கு முன் ஆட்சியில் இருந்த பூவிக்ரமனின் சகோதரன். இவன் ஆட்சிப் பொறுப்பேற்றதும் சாளுக்கியர்களும்,பல்லவர்களும் இவனை அடக்க முற்பட்டனர். ஆனால் சிவமாறன் எவருக்கும் தலை வணங்காமல் திறம்பட ஆட்சி செலுத்தினான். இவனது கல்வெட்டுகள் தமிழகத்தின் தர்மபுரி,கிருட்டிணகிரி மாவட்டங்களில் காணப்படுகின்றன.

சிவமாறனின் பட்டப் பெயர்கள்

தொகு

அவனி மகேந்திரன், ஸ்திரவிநித பிருத்துவி கொங்கனி, நவகாமன், சிஸ்த பிரியன் போன்ற பட்டப் பெயர்களைச் சிவமாறன் பெற்றிருந்தான்.

உசாத்துணை

தொகு
  • வரலாற்றில் தகடூர் - செ.சாந்தலிங்கம் பக்.55
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_சிவமாறன்&oldid=3256858" இலிருந்து மீள்விக்கப்பட்டது