முதல்புகு முதல்விடு மற்றும் கடைபுகு முதல்விடு கணக்கியல்
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
உற்பத்திப் பொருட்கள், மூலப்பொருட்கள், பாகங்கள் அல்லது ஒரு நிறுவனத்தின் பண மதிப்பீடு கொண்ட சரக்குகள் மற்றும் நிதி விஷயங்களை நிர்வகிப்பதில் முதல்புகு முதல்விடு முறை மற்றும் கடைபுகு முதல்விடு கணக்கியல் பயன்படுத்தப்படுகின்றன. பல்வேறு கணக்கியல் நோக்கங்கள் மற்றும் சரக்கு மறு கொள்முதல் (வெவ்வேறு விலையில் வாங்கப்பட்டால்) பற்றிய விலை சார்ந்த அனுமானங்கள் முதலியவற்றை நிர்வகிக்க அவை பயன்படுத்தப்படுகின்றன.
முதல்புகு முதல்விடு முறை:
தொகுமுதல்புகு முதல்விடு என்பது முதலில் கணக்குள் வரும் சரக்கை முதலில் செலவிடுவதைக் குறிக்கிறது. அதாவது பழைய சரக்குப் பொருட்கள் முதலில் விற்கப்பட்டதாகப் பதிவுசெய்யப்படும்.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், முதலில் வாங்கிய சரக்குகளுடன் தொடர்புடைய செலவு முதலில் செலவிடப்பட்ட செலவு ஆகும். முதல்புகு முதல்விடு முறையில், இருப்புநிலைக் குறிப்பில் பட்டியலிடப்பட்ட சரக்குகளின் விலை மிகச் சமீபத்தில் வாங்கிய சரக்குகளின் விலையைக் குறிக்கும்.
எடுத்துக்காட்டு:
அலகுகளின் எண்ணிக்கை | விலை |
---|---|
100 | 50 ரூபாய் |
125 | 55 ரூபாய் |
75 | 79 ரூபாய் |
நவம்பர் மாதத்தில் டி&எல் லிமிடெட் 210 அலகுகளை விற்றால், நிறுவனம் முதல் 100 அலகுகள் தொடர்புடைய செலவை ரூ.50 ஆகவும், மீதமுள்ள 110 அலகுகள் ரூ.55 ஆகவும் செலவிடும். முதல்புகு முதல்விடுவின்கீழ், நவம்பர் மாத விற்பனைக்கான மொத்த செலவு, 11,050 ஆகும். பட்டியல் பின்வரும் வழியில் கணக்கிடப்படும்:
அலகுகளின் எண்ணிக்கை | அலகின் விலை | மொத்தம் |
---|---|---|
மீதமுள்ள 15 அலகுகள் | 55 ரூபாய் | 15× 55=825 ரூபாய் |
75 அலகுகள் | 59 ரூபாய் | 75×59 =4425 ரூபாய் |
மொத்தம் | 5250 ரூபாய் |
எனவே, இருப்புநிலை இப்போது 50
5,250 ரூபாய் மதிப்புள்ள சரக்குகளைக் காண்பிக்கும்.
கடைபுகு முதல்விடு கணக்கியல்:
தொகுகடைபுகு முதல்விடு கணக்கியல்முறை என்பது கடைசியில் கணக்குள் வரும் சரக்கை முதலில் செலவிடுவதைக் குறிக்கிறது. அதாவது மிகச் சமீபத்தில் தயாரிக்கப்பட்ட/வாங்கப்பட்ட பொருட்கள் முதலில் விற்கப்பட்டதாக/உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்டதாகப் பதிவுசெய்யப்படுகின்றன. 1970-களில் இருந்து, சில அமெரிக்க நிறுவனங்கள் கடைபுகு முதல்விடு முறையின் பயன்பாட்டை நோக்கி நகர்ந்தன. இது பணவீக்க காலங்களில் அவர்களின் வருமான வரிகளைக் குறைத்தது. ஆனால் சர்வதேச நிதி அறிக்கைத் தரநிலைகள் (IFRS) கடைபுகு முதல்விடு முறையைத் தடை செய்ததிலிருந்து, அதிகமான நிறுவனங்கள் முதல்புகு முதல்விடு முறைக்குத் திரும்பின.
முதல்புகு முதல்விடு எடுத்துக்காட்டையே
கடைபுகு முதல்விடு முறையில் எடுத்துக்காட்டாகக் கொள்வோம்.[1]
முதல் 75 அலகுகளுடன் தொடர்புடைய செலவு ரூ.59 ஆகவும், 125 அலகுகளை ரூ.55 ஆகவும், மீதமுள்ள 10 அலகுகளை ரூ.50 ஆகவும் செலவாகும். கடைபுகு முதல்விடு முறையின்கீழ், நவம்பருக்கான மொத்த விற்பனைச் செலவு, 11,800 ரூபாய் ஆகும். முடிவடையும் பட்டியல் பின்வரும் வழியில் கணக்கிடப்படும்:
அலகுகளின் விலை | அலகின் விலை | மொத்தம் |
---|---|---|
மீதமுள்ள 90 அலகுகள் | 50 ரூபாய் | 4500 ரூபாய் (90×50) |
மொத்தம் | 4500 ரூபாய் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "FIFO and LIFO accounting", Wikipedia (in ஆங்கிலம்), 2019-11-12, பார்க்கப்பட்ட நாள் 2020-08-25