முதியோர் வாசனை

வயதான மனிதர்களின் மேல் வெளிப்படும் வாசனை

முதியோர் வாசனை (Old person smell) வயதான மனிதர்களிடத்தில் வெளிப்படும் தனித்துவமான வாசனையைக் குறிக்கிறது.[1] பல விலங்கு இனங்களைப் போலவே மனித வாசனையும் வயதாகும் செயல்முறையின் மூலம் தொடங்கப்பட்டு பல்வேறு வேதியியல் மாற்றங்களின் அடிப்படையில் தனித்துவமான நிலைகளுக்கு உட்படுகிறது. பிற காரணிகளுக்கு மேலதிகமாக வயதை அடிப்படையாகக் கொண்ட சாத்தியமான கூட்டாளர்களின் பொருத்தத்தை தீர்மானிக்க இவ்வாசனை மனிதர்களுக்கு உதவுகிறது என்று ஓர் ஆராய்ச்சி கூறுகிறது.[2]

வயதான நபரின் வாசனை 2-நோனீனால் என்ற வேதிச் சேர்மத்தின் விளைவாக இருக்கலாம் என்று ஓர் ஆய்வு பரிந்துரைத்தது. நோனீனால் ஒரு நிறைவுறா ஆல்டிகைடாகும். வயதாகும் செயல்முறை காலத்தில் மனித உடலில் நிகழும் வாசனை மாற்றங்களுடன் இச்சேர்மம் தொடர்பு கொண்டுள்ளது.[3]

இருப்பினும் மேலும் சில கருதுகோள்களும் உள்ளன.[4] மற்றொரு ஆய்வு வயதானவர்களிடத்தில் 2-நோனீனாலைக் கண்டறிவதில் தோல்வியுற்றது. ஆனால் குறிப்பிட்ட அளவு பென்சோதயசோல், இருமெத்தில்சல்போன் மற்றும் நோனனால் போன்ற வேதிச் சேர்மங்களின் செறிவு முதியோரிட்த்தில் கணிசமாகக் அதிகரித்ததைக் அந்த ஆய்வு கண்டது.[5]

2012 ஆம் ஆண்டில் மோனெல் வேதியியல் உணர்வுகள் மையம் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டது. வயது, நோய் மற்றும் மரபணு பொருந்தக்கூடிய தன்மை போன்ற தகவல்களை அடையாளம் காணும் மனிதனின் திறமையே தனித்துவமான "வயதான மனிதனின் வாசனைக்கு" காரணம் என்று கூறியது.

"வயதானவர்களுக்கென்று ஒரு தெளிவான அடித்தள வாசனை உள்ளது, இது மிகவும் நடுநிலையானதாகவும் அப்படியொன்றும் மிகவும் விரும்பத்தகாத வாசனையாக இல்லை என்றும் இளையோர் கருதுவதாக உணர்வு நரம்பியல் விஞ்ஞானி யோகான் லுந்துசுடோர்ம் கூறுகிறார்.[6]

வயதான நபரின் வாசனை சப்பானில் கரேசே என அழைக்கப்படுகிறது. அங்கு முதியோர்களின் தனிப்பட்ட அலங்காரத்திற்கு அதிக சமூக மதிப்பு கொடுக்கப்படுகிறது. மேலும் குறிப்பிட்ட இவ்வாசனையை அகற்றும் விலையுயர்ந்த சோப்புகள் அதிக வயதான நுகர்வோரை இலக்காகக் கொண்டு அங்கு விற்பனை செய்யப்படுகின்றன.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. Sifferlin, Alexandra (31 May 2012). "'Old-Person Smell' Really Exists, Scientists Say". Time இம் மூலத்தில் இருந்து 4 July 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150704160359/http://healthland.time.com/2012/05/31/old-person-smell-really-exists-scientists-say. பார்த்த நாள்: 10 February 2016. 
  2. Mitro, Susanna; Gordon, Amy R.; Olsson, Mats J.; Lundström, Johan N. (30 May 2012). "The Smell of Age: Perception and Discrimination of Body Odors of Different Ages". PLOS ONE 7 (5): e38110. doi:10.1371/journal.pone.0038110. பப்மெட்:22666457. 
  3. Haze, S.; Gozu, Y.; Nakamura, S.; Kohno, Y.; Sawano, K.; Ohta, H.; Yamazaki, K. (2001). "2-Nonenal Newly Found in Human Body Odor Tends to Increase with Aging". Journal of Investigative Dermatology 116 (4): 520–4. doi:10.1046/j.0022-202x.2001.01287.x. பப்மெட்:11286617. 
  4. MacMillan, Amanda. "Scientists Confirm Existence of 'Old Person Smell'". Health.com. Health Media Ventures, Inc. Archived from the original on 8 September 2015. பார்க்கப்பட்ட நாள் 30 May 2012.
  5. Gallagher, M.; Wysocki, C.J.; Leyden, J.J.; Spielman, A.I.; Sun, X.; Preti, G. (October 2008). "Analyses of volatile organic compounds from human skin". British Journal of Dermatology 159 (4): 780–791. doi:10.1111/j.1365-2133.2008.08748.x. பப்மெட்:18637798. 
  6. "The special scent of age". EurekAlert!. 30 May 2012. Archived from the original on 20 June 2015.
  7. Levenstein, Steve (6 August 2008). "Japan's Aging Population Deals with Old Man Smell". Inventor Spot. Halcyon Solutions Inc. Archived from the original on 6 September 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதியோர்_வாசனை&oldid=3165040" இலிருந்து மீள்விக்கப்பட்டது