முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் (தமிழ்நாடு)

பல்கலைக்கழகம் வழங்கும் ஏதாவது ஒரு பாடத்தில் முதுகலை அல்லது முதுநிலை அறிவியலில் பட்டம் பெற்று அதன் பின்பு கல்வியியல் கல்வியில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் தமிழ்நாட்டிலுள்ள மேல்நிலைப்பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளில் அவர்கள் பயிற்சி பெற்ற பட்டப்படிப்புகளுக்கு ஏற்ற பாடங்களுக்கு ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் என்று அழைக்கப்படுகின்றனர்.