முதுதத்துவமாணி
முதுதத்துவமாணி (தமிழக வழக்கு: ஆய்வியல் நிறைஞர், M.phil), கலாநிதிப் பட்டத்தின் முன்பாக வழங்கப்படுகின்றதொரு பட்டமாகும். கலைமாணிப் பட்டத்தைப் பூர்த்தி செய்துகொண்டவர்கள் ஆராய்ச்சிக் கட்டுரையொன்றைச் சமர்ப்பிப்பதன் மூலம் இப்பட்டத்தினைப் பெற்றுக் கொள்ளமுடியும்.[1]
ஆனால் இலங்கைப் பல்கைலக்கழக கல்வித் திட்டத்தில் கலைமாணிப் பட்டம் பெற்றவர்கள் அதை தாெடர்ந்து முதுமாணிப் பட்டம் ஒன்றைப் பெற்றதன் பின்னர் ஆய்வுக்கட்டுரை ஒன்றை சமர்ப்பிப்பதன் மூலமே இப் பட்டத்தினை பெற்றுக்கொள்ள முடியும். எனினும் இளமானிப் பட்டக் கற்கையில் சிறப்புப் பட்டம் ஒன்றையும் அதில் முதலாம் வகுப்பு அல்லது இரண்டாம் வகுப்பில் மேற்றரச் சித்தி பெற்றவர்களும் முதுதத்துவமாணி பட்டம் பெற தகுதியுடையவர் ஆவர்.