முதுமொழி வஞ்சி
தமிழ் இலக்கணத்தில் முதுமொழி வஞ்சி என்பது புறப்பொருள் திணைகளுள் ஒன்றான வஞ்சித் திணையின் ஒரு துறை அல்லது உட்பிரிவு ஆகும். "முதுமொழி" என்பது இங்கே குடியின் மூத்தாரைப் புகழ்வதைக் குறித்தது. பகைவர் மீது படை நடத்திச் செல்லும் மன்னனின் குடியின் மூத்தோனைப் புகழ்வதைப் பொருளாகக் கொண்டதால் இத்துறை "முதுமொழி வஞ்சி" எனப் பெயர் பெற்றது. தொல்காப்பியம் இதனை வஞ்சித்திணையில் ஒரு துறையாகக் கூறவில்லை. ஆனால், கிபி ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் புறப்பொருள் வெண்பாமாலையில் இது கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
இதனை விளக்க, தொன்மையான மரபினையுடைய, வாளேந்திய குடியின் முன்னோனது சிறப்பு நிலையைக் கூறுவது[1] என்னும் பொருள்படும் பின்வரும் பாடல் புறப்பொருள் வெண்பாமாலையில் வருகிறது.
- தொல்மரபின் வாள்குடியின்
- முன்னோனது நிலைகிளந்தன்று
எடுத்துக்காட்டு
தொகு- குளிறு முரசம் குணில்பாயக் கூடார்
- ஒளிறுவாள் வெள்ளம் உழக்கிக் - களிறுஎறிந்து
- புண்ணொடு வந்தான் புதல்வற்குப் பூங்கழலோய்
- தண்ணடை நல்கல் தகும்
- - புறப்பொருள் வெண்பாமாலை 45.
குறிப்பு
தொகு- ↑ இராமசுப்பிரமணியன், வ. த., 2009. பக். 78, 79
உசாத்துணைகள்
தொகு- இராமசுப்பிரமணியன், வ. த., புறப்பொருள் வெண்பாமாலை, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 2009.
- கௌரீஸ்வரி, எஸ். (பதிப்பாசிரியர்), தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணனார் உரை, சாரதா பதிப்பகம், சென்னை, 2005.