முதுவெள்ளில்
(முதுவெள்ளிலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
முதுவெள்ளிலை என்னும் ஊர் மக்கள் பாண்டியன் வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் தலையாலங்கானத்துப் போரில் வெற்றி பெற்றதை முதுவெள்ளிலை மக்கள் கொண்டாடி மகிழ்ந்தார்களாம்.[1]
இவ்வூரில் மீன் நிற்கும் கோள்நிலை மாறினும் மழை பொழிந்து வெள்ளம் வருமாம். நெல் அறுப்போர் அறுவடைப் பாட்டோடு புள்ளினங்களின் பாட்டும் சேர்ந்து ஒலிக்குமாம். இவ்வூர் மக்கள் கடலில் மீன் பிடிக்கத் திமிலில் செல்வார்களாம். உப்புக் காய்ச்சுவார்களாம்.
வெள்ளில் என்னும் சொல் விளாமரத்தைக் குறிக்கும். எனவே முதுவெள்ளிலை என்னும் ஊர் முதிர்ந்த விளாமரங்கள் மிக்க ஊர் எனலாம்.
அடிக்குறிப்பு
தொகு- ↑ மதுரைக்காஞ்சி – அடி 106 முதல் 130