முத்தையன் சாமி

முத்தையன்‌ என்பவர் திருப்பூர் மாவட்டம் தென்னம்பாளையம் எனும் ஊரில் கோயில் கொண்டுள்ள நாட்டுப்புற தெய்வமாவார். இவர் தென்னம்பாளையத்திலிருந்து வடக்கே அரண்மனைப்புதூர்‌, கிழக்கே பெரிச்சிபாளையம்‌, தெற்கே பழவஞ்சிபாளையம்‌, மேற்கே இருக்கும்‌ குளம்‌ வரை முந்தையனின்‌ எல்லைப்பகுதிகளாக கொண்டு ஆட்சி செய்துள்ள குறுநில மன்னர் ஆவார். [1]

இவர் பொதுவுடமைச்சிந்தையாளர்‌. சிறந்த பண்பாளர்‌, மனிதநேயப்பற்றாளர்‌, கட்டுப்பாடுகளை விரும்புவர்‌, கோபக்காரர்‌ எல்லா செயல்களையும்‌ சுறுசுறுப்பாகவே செய்ய வேண்டும்‌ என விரும்புபவர்‌ என்பதை அவரது வாழ்முறைக்கதைகளிலிருந்து அறிஞர்கள் கூறுகின்றனர்.

கோயில் வீடுகள் தொகு

முத்தையனுக்கு தென்னம்பாளையத்தில்‌ ஊருக்குள்‌ ஒரு வீடு உள்ளது. இதைக்‌ கோவில்வீடு என்று அழைக்கிறார்கள்‌. ஊரை அடுத்து ஆற்றின்‌ கரையோரம்‌ இன்னொரு சொந்தமான பெரிய வீடு முத்தையனுக்கு உள்ளது. இதைப்‌ பெரியகோவில்‌ என்று அழைக்கின்றனர்.

ஆதாரங்கள் தொகு

  1. புத்தகம்:- நாட்டுப்புற வழிபாட்டு மரபுகளும்‌ நம்பிக்கைகளும்‌ - தொகுப்பு -இரா.சந்திரசேகரன்‌, பக்கம் 53,54
"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்தையன்_சாமி&oldid=3716959" இலிருந்து மீள்விக்கப்பட்டது