முன்னிலை சோசலிசக் கட்சி

முன்னிலை சோசலிசக் கட்சி (Frontline Socialist Party) என்பது இலங்கையின் ஒரு இடதுசாரி அரசியல்கட்சி ஆகும். இக்கட்சி மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து கருத்து வேறுபாடுகளால் பிரிந்து சென்றவர்களால் 2012 ஏப்ரல் 9 ஆம் நாள் தொடங்கப்பட்டது[1]. இக்கட்சியின் நிறுவனர்களில் ஒருவர் பிரேம்குமார் குணரத்தினம். இவர் தற்போது நாடுகடத்தப்பட்ட நிலையில் ஆத்திரேலியாவில் புகலிடம் பெற்றுள்ளார்.

Frontline Socialist Party
தலைவர்சேனதீர குணதிலக்க
தொடக்கம்ஏப்ரல் 9, 2012 (2012-04-09)
பிரிவுமக்கள் விடுதலை முன்னணி
கொள்கைகம்யூனிசம், மார்க்சிய-லெனினியம்
இணையதளம்
www.flsocialistparty.com
இலங்கை அரசியல்

முன்னிலை சோசலிசக் கட்சியின் உருவாக்கியுள்ள சம உரிமை இயக்கம் பற்றிய விளக்கக் கூட்டங்கள் பிரேம்குமார் குணரத்தினம் தலைமையில் ஐரோப்பாவெங்கும் நடைபெற்று வருகிறது. சம உரிமை இயக்கம் என்கின்ற ஒரு முன்னணி அமைப்பினூடாக, இலங்கையில் இன ஒடுக்குமுறைக்கும், இனவாதத்திற்கும் எதிராக போராடுவது, இனங்களுக்கிடையில் ஓர் ஐக்கியத்தை உருவாக்குவதுடன், சமத்துவமின்மையை உருவாக்கிய சமூக அமைப்பு முறையை தூக்கி எறிந்து புதிய சமூக அமைப்பு முறையை உருவாக்குவதன் மூலம் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் உரிமைகளை வென்றெடுப்பது என்னும் செயல் திட்டத்தினை முன்னிலை சோசலிச கட்சி முன்வைத்துள்ளது[2].

சம உரிமைக்கான இயக்கத்தின் இரு உறுப்பினர்கள் லலித்குமார் வீரராஜ், குகன் முருகானந்தன் ஆகியோர் 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 9 இல் யாழ்ப்பாணத்தில் வைத்துக் காணாமல் போனார்கள். இவர்கள் பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை அறியப்படவில்லை[3]. இவர்கள் இலங்கையில் காணாமல் போனதற்கு எதிராக முன்னிலை சோசலிசக் கட்சியினர் போராட்டங்கள் பல நடத்தி வருகிறார்கள்.

மேற்கோள்கள் தொகு

  1. www.flsocialistparty.com[தொடர்பிழந்த இணைப்பு]
  2. முன்னிலை சோசலிசக் கட்சியும் புதிய திசைகளும்: புதிய திசைகள்
  3. "Disappeared Kugan And Lalith Still Missing Civil Administration Or Military Rule?". Archived from the original on 2012-01-20. பார்க்கப்பட்ட நாள் 2013-02-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முன்னிலை_சோசலிசக்_கட்சி&oldid=3568266" இலிருந்து மீள்விக்கப்பட்டது