முன்னை

ஒரு தாவரம்

முஞ்ஞை, முன்னை, மின்னை, பசுமுன்னை (Premna mollissima, the dusky fire brand mark) என்பது Lamiaceae குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். இது 8 மீட்டர் வரை வளரக்கூடிய சிறிய மரமாகும் அல்லது புதர் ஆகும். இதன் இலைகளை முன்னைக் கீரை என்பர். இது இந்தியா, வங்காளதேசம் மற்றும் இலங்கையில் காணப்படுகிறது.

விளக்கம் தொகு

இது பூக்கும் இரு வித்திலைத் தாவரமாகும். இது ஒரு புதர்ச்செடி. சிறுமரமெனவும் கூறுவர் 20-25 அடி உயரம் (6-8 மீ) வரை பரவி வளரும். இம்மரத்தின் பட்டையானது சாம்பல் முதல் வெள்ளை நிறத்தில் இருக்கும். தனியிலை சிறியது முட்டைவடிவானது, இலை நுனி கூரியது, பளபளப்பானது, பசியது. இலையில் நுண்மயிர் இருக்கும். இலை வரம்பு நேரானது. இலை நரம்பு 4.3, 2. இலைக்காம்பு 0.5-1.5 அங்குலம் நீளமானது. காய்ந்த இலை கறுப்பு அல்லது நீல நிறமாக இருக்கும்.[1]

மலர் தொகு

இதன் மலர்கள் பசுமை கலந்த வெண்மை நிறமானது மலரின் இதழ்கள் இரு பகுதியான உதடுகள் போன்றவை. மேற்புறம் 2 இதழ்களும் அடிப்புறம் 3 இதழ்களும் இணைந்தவ. இதன் புல்லி வட்டத்தில் ஐந்து புறவிதழ்கள் இரு பிளவானது. மேற்புறத்தில் இரு இதழ்களும் அடிப்புறத்தில் மூன்று இதழ்களும் இணைந்தவை. அல்லி வட்டமானது அடியில் அல்லியிதழ்கள் இணைந்து குழல்வடிவாயிருக்கும் ஐந்து சிறிய மடல்கள் இரு பிளப்பாக (2 + 3) இருக்கும். நுண்மயிர் உட்புறத்தில் அடர்ந்திருக்கும். மகரந்த வட்டத்தில் 4 தாதிழைகள்: 2 குட்டையாக இருக்கும். அகவிதழ்க்குழலின் அடியில் ஒட்டிக்கொண்டிருக்கும். தாதுப்பை முட்டைவடிவானது. சூலக வட்டத்தில் இரண்டு சூலிலைச் சூலகம். நான்கு சூல்கள் சூல்தண்டு நீளமானது. சூல்முடி இரு பிளவானது.

கனி தொகு

ட்ரூப் எ ன ப் ப டு ம் சதைக்கனி. புல்லியின் மேல் ஒட்டிக்கொண்டு இருக்கும். உருண்டையானது. கனியின் நடுவே உள்ள சதையுறை மெல்லியது: உள்ளுறை வலியது. ஒரே ஒரு பைரீன் எனப்படும் கனி உண்டாகும். உட்கூடு உடையது. விதை சற்று நீளமானது. விதையுறை மெல்லியது. விதையிலைகள் தட்டையாக இருக்கும் ஆல்புமின் இல்லை.[2]

இந்தியாவில் காணப்படும் இடங்கள் தொகு

இத்தாவரமானது கருநாடகத்திலும், தென்னார்க்காடு முதல் திருநெல்வேலி வரையிலும், மேற்குக் கடல் ஓரமுள்ள கொச்சின் முதலிய இடங்களிலும் வளர்கிறது.

பயன்கள் தொகு

இது ஒரு நல்ல மருந்துச்செடி, ஒருவகையான மணம் இலைகளில் உண்டு. இதன் இலைகளை முன்னைக் கீரை என்று உணவாகக் கொள்ளப்படுகிறது. முன்னை இலைகளைப் பசும்பாலில் அரைத்து அமாவாசை நாள்களில் உட்கொண்டால், உடம்பின் மேல் உள்ள பலவகையான சரும நோய்களும் தீரும் என்பர்.

இலக்கிய்களில் தொகு

சங்க இலக்கியங்களுள் புறநானுற்றில் காணப்படும் முஞ்ஞை என்பது ஒரு புதர்ச்செடி இது. இந்த முஞ்ஞை புதர்ச் செடியைப் பற்றிப் புறநானுாற்றுப் பாடல்கள் மட்டும் கூறுகின்றன அவை பின்வருமாறு.

இடுமுள் படப்பை மறிமேய்ந்து ஒழிந்த
குறுநறு முஞ்ஞைக் கொழுங்கண் குற்றடகு
புன்புல வரகின் சொன்றியொடு பெறுஉம் -புறநானூறு 197: 10-12

முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பி
பக்தர் வேண்டாப் பலர் தூங்கு கீழல் -புறநானூறு 3 20: 1-2

தாளிமுதல் டிேய சிறுகறு முஞ்ஞை
முயல் வந்து கறிக்கும் முன்றில்
சறுார் மன்னனைப் பாடினைசெலினே -புறநானூறு.328:14-16

இம்மூன்று புறநானூறு செய்யுள்களின் மூலம், இப்புதர்ச்செடியைப் பற்றி அறியக்கூடியனவானது; முசுண்டைக் கொடியும் இதனிற் படரும். அதனால் இது நல்ல நிழல் தரும்; இதனடியில் பலர் சேர்ந்து துயிலுதற்கும் உதவும்: இதன் இலைகள் சிறியன; ஒருவகையான நறுமணம் தருவன: இலைகளை ஆடும், முயலும் தின்பதுண்டு: ஆடு மேய்ந்தொழிந்த இவ்விலைகளை எளியோர் வரகரிசிச் சோற்றுடன் தின்பதுண்டு. இக்குறிப்புகளைத் தவிர வேறு யாதும் இச்செடியைப் பற்றி அறிய முடியவில்லை. குறிஞ்சிப் பாட்டில் முஞ்ஞை கூறப்படவில்லை.[3]

குறிப்புகள் தொகு

  1. "Premna mollissima - Useful Tropical Plants". tropical.theferns.info. Archived from the original on 2018-06-25. பார்க்கப்பட்ட நாள் 2019-10-26.
  2. http://indiabiodiversity.org/species/show/264097
  3. சங்க இலக்கியத் தாவரங்கள், டாக்டர் கு. சீநிவாசன், பக்கம் 584-587
"https://ta.wikipedia.org/w/index.php?title=முன்னை&oldid=3853103" இலிருந்து மீள்விக்கப்பட்டது