முன் கணிதத் திறன்கள்
முன் கணிதத் திறன்கள் என்பது, பள்ளிப் பருவத்திற்கு முந்தைய பருவத்தில் பெறும் அடிப்படைக் கணித அறிவாகும். குழந்தைகள் அன்றாட வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகளின் மூலமும், முன்பருவக் கல்வியினைப் பெறுவதன் மூலமும் அடிப்படைக் கணித அறிவைப் பெறுகின்றனர். எண்களைக் கூறும் திறன், எண்களை முறையாக வரிசைப்படுத்தும் திறன், எண்களைச் சரியாக உச்சரிக்கும் திறன், வடிவங்களில் சிறியது, பெரியது என தீர்மானிக்கும் திறன், திரையில், புத்தகத்தில், நேரடியாகப் பார்க்கும் பொருட்களின் எண்ணிக்கையைக் கூறும் திறன் ஆகியவையே முன் கணிதத் திறன்களாகும்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ Kovacek, Luna. "Early Numeracy Skills in Preschool-Aged Children". Brighterly. பார்க்கப்பட்ட நாள் 11 January 2023.