முப்பரிமாண கடவுச்சொல்
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
பொதுவாக கடவுச்சொல் என்பது ஒரு அங்கீகரிக்கபட்ட பயனரை அனுமதிப்பதற்காக பயன்படுத்தப்படும் ஒரு ரகசிய சொல் அல்லது சரம்.இணையத்தில் ஒரு பயனரை அங்கீகரிக்கும் முறை சுலபமாக இருக்கும் அல்லது மிகவும் கடுமையாக இருக்கும்.அசுர வேகத்தில் வளர்ந்து வரும் பல வகையான தொழில்நுட்பத்தால் , இன்னொருவருடைய கடவுச்சொல்லை ஒரு அங்கீகரிக்கபடாத நபர் திருடுவது எளிமையான செயலாக உள்ளது. ரகசியமான அந்த கடவுச்சொல்லை திருடுவதற்காக பல்வேறு வழிமுறைகளை இணையத்திலே நாம் காண முடியும்.பயனர்கள் பெரும்பாலும் உரை கடவுச்சொற்கள், கைரேகை பதிவுகள் அல்லது கருவிழிப் பதிவுகள் மூலமாக அங்கீகரிக்கப்படுகிறார்கள்.இதில் நம் உடலின் உள்ள அடையாளங்கள் மூலமாக அங்கீகரிக்கப்டும் முறை மேற்சொன்ன "கடவுச்சொல் திருடர்களை" தடுப்பதற்காக கண்டுபிடிக்கபட்ட வழிமுறை.மேலும் அதை எல்லா இடங்களிலும் பயன்படுத்துவது சிறிது கடினம்.ஏனெனில் உடலின் அடையாளங்களை உள்வாங்கி அங்கீகரிக்க தனிப்பட்ட இயந்திரங்கள் உள்ளன.அவற்றை பொருத்தி பயன்படுதுவதற்கு வல்லுனர்களின் உதவி தேவை.ஆனால் உரை கடுச்சொற்களை எளிதாக பயன்படுத்தலாம்.இப்பொழுதும் உரை கடவுச்சொற்களை எளிமையாக உரிய வழிமுறைகள் மூலமாக கண்டுபிடிக்க இயலும்.இத்தகைய செயல்களை தடுக்கும் விதமாக முப்பரிமாண கடவுச்சொல் என்னும் புதிய முறை கண்டுபிடிக்கபட்டுள்ளது. இந்த முப்பரிமாண கடவுச்சொல் தொழில்நுட்பம் பயனரை சுவாரஸ்யமான முறையில் அங்கீகரிக்கிறது.பயனரின் சுய விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே எந்த கடவுச்சொல்லும் உருவாக்கபடுகிறது.ஆனால் இந்த புதிய முறை, உரை வடிவிலான கடவுச்சொல்லை பயன்படுத்தாததே இதனுடைய பலம்.உரை வடிவிலான கடவுச்சொல் மனித நினைவகம் சார்ந்த தொழில்நுட்ப முறை.இவை எளிதாக நினைவில் கொள்ளும் வகையில் தான் பெரும்பாலும் உருவாக்கப்படும். முப்பரிமாண கடவுச்சொல் தொழில்நுட்பம் பயனரை முதலில் வரைகலை பயனர் இடைமுகத்திற்கு கொண்டு செல்லும்.இந்த வரைகலை பயனர் இடைமுகதிற்குள் நுழைவதற்கு ஒரு உரை கடவுச்சொல் தேவை.அந்த இடைமுகதிற்குள் நுழைந்தவுடன் ஒரு முப்பரிமாண மெய்நிகர் அறை நம்முடைய கணினி திரையில் தோன்றும்.அந்த அறையில் பலவகையான பொருட்கள் ,உபகரணங்கள் முதலியன தனிப்பட்ட பண்புகளுடன் அமைக்கப்பட்டு இருக்கும்.ஒரு பயனர் அந்த மெய்நிகர் அறையில் உள்ள விஷயங்களோடு தன்னை தக்கவாறு தொடர்பு படுத்திக்கொள்வார்.அந்த முப்பரிமாண மெய்நிகர் அறையில் இருக்கும் ஒவ்வொரு பொருளையும் மூன்று பரிமாணங்களில் நகர்த்த முடியும்.அந்த வெளியில் உள்ள எல்லா பொருட்களுக்கும் இந்த பண்பு பொருந்தும்.உதாரணத்திற்கு,அந்த மெய்நிகர் வெளியில் பயனர் ஒரு புத்தகத்தை இடப்பக்கமாக நகர்த்துகிறார் என்று வைத்துக்கொள்வோம்.அவர் நகர்த்திய அந்த புத்தகம் அமைந்த இடத்தின் ஒருங்கிணைந்த முப்பரிமாண அளவு கடவுச்சொல்லாக பயன்படுத்தபடும்.இதை வைத்து அந்த பயனர் அங்கீகரிக்கப்படுவார்.இந்த மெய்நிகர் வெளியை நம்முடைய விருப்பதிற்கு ஏற்றவாறு சுவாரசியமாகவும் வடிவமைக்கலாம்.இதில் நாம் உயிரியளவுத் தொழில்நுட்பதையும் பயன்படுத்தலாம்.இதில் நாம் பலவகையான நிலைகளையும் உட்படுத்தலாம். இவ்வகை தொழில்நுட்பம் கடவுச்சொல்லை எளிதாக நினைவில் வைத்துகொள்ள ஏதுவாகவும் மற்றும் அதனுடைய பாதுகாப்பை பண்மடங்கு அதிகரித்தும் தன்னுடைய தனித்தன்மையை நிலைநாட்டுகிறது.இத்தொழில்நுட்பம் மூலம் கீழ்க்கண்ட தேவைகள் பூர்த்தியாகின்றன.
1)இந்த புதிய முறை கடவுச்சொல்லை எளிதாக நினைவில் வைத்துகொள்வதற்கும் ,மற்றவர்களை ஊடுருவமல் தடுப்பதற்கும் உதவுகிறது. 2)இவ்வகையான கடவுச்சொற்களை நாம் காகிதத்தில் எழுதவோ,பிறரிடம் பகிர்ந்து கொள்வதோ அவ்வளவு எளிதல்ல. 3)இந்த புதிய முறை கடவுச்சொல்லை எளிதாக மாற்றுவதற்கும் ,திரும்பப்பெறுவதற்கும் வழிவகை செய்துள்ளது.
இவ்வகை தொழில்நுட்பம் கடவுச்சொல் பாதுகாப்பிர்க்கு பெரிதும் உதவுகிறது.மேலும் கடவுச்சொல் திருடர்களை தடுக்கவும் வழிவகை செய்துள்ளது.