முப்பேர் நாகனார்
முப்பேர் நாகனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது நற்றிணை 314 எண்ணுள்ள பாடல். இந்தப் பாடல் தலைவி தலைவனைப் பிரிந்த காலத்தில் உடல் மெலிந்திருக்கும் பாலைத்திணைச் செய்தியைத் தெரிவிக்கிறது.
பாடல் சொல்லும் செய்தி
தொகுஅவர் நீண்ட வழிப்பயணம் மேற்கொண்டுள்ளார். வெயிலின் கொடுமையால் வெடிக்கும் கள்ளியின் மேல் இருந்துகொண்டு ஆண்புறா தன் பெண்புறாவை அழைக்கும் வழியில் செல்கிறார். வயது முதிர்ந்தவர் தன் இளமையை மீண்டும் எய்த முடியாது. வாழும் நாட்களை அறிந்தவர் யாருமில்லை என்னும் உண்மையை அவர் எண்ணிப் பார்க்கவில்லை.
பித்திகைப் பூ மாலையும், வைரமாலையும் அணிந்து மூடிக் கிடந்த என் கருங்கண் முலை அமுங்கும்படி புல்லிக் கிடந்தவர், தன் இளமை, வாழ்நாள பற்றிய நிலைப்பாடுகளை எண்ணிப் பார்க்கவில்லை. (என்ன செய்யலாம்) எனறெல்லாம் தலைவி எண்ணிப் பார்க்கிறார்.