மும்முறை தாண்டுதல்

(மும்முறைப் பாய்தல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மும்முறை தாண்டுதல் (இலங்கை வழக்கு: முப்பாய்ச்சல்) (triple jump அல்லது hop, step and jump அல்லது hop, skip and jump) நீளம் தாண்டுதலைப் போன்ற ஓர் தடகள போட்டியாகும். இதில் போட்டியாளர் களத்தில் ஓடிவந்து தாவிக்குதித்து (hop), மேலெழுந்து (step), பின்னர் நீளத் தாண்டி (jump) மணல் பள்ளத்தில் விழுவார்.

முன்னாள் உலக சாதனையாளர் வில்லி பேங்க்ஸ்
International University Sports Federation - Gwangju 2015 - Men's Triple Jump Final, Dmitrii SOROKIN (RUS 17.29) wins Gold.

மும்முறை தாண்டுதல் தொன்ம ஒலிம்பிக் போட்டிகளில் இடம் பெற்றிருந்தது; 1896ஆம் ஆண்டு தொடங்கிய தற்கால தற்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் துவக்கத்திலிருந்தே இதுவும் ஒன்றாக விளங்குகிறது.

இப்போட்டிகளில் ஆண்களுக்கான உலக சாதனையாக பிரித்தானியர் ஜோனாதன் எட்வர்ட்ஸ் நிகழ்த்திய 18.29 மீட்டரும் பெண்களுக்கான உலக சாதனையாக உக்ரைனின் இனேசா கிராவெட்ஸ் நிகழ்த்திய 15.5 மீடரும் உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மும்முறை_தாண்டுதல்&oldid=3502737" இலிருந்து மீள்விக்கப்பட்டது